தேர்தல் என்பதால் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு நரேந்திர மோடி சென்றார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ ஆலயத்தில், பாதிரியார்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மற்ற நாட்களில் பாவாடை என கிண்டல் பண்ணுவோம்... தேர்தல் வந்தால் வெட்கமே இல்லாமல் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்குவோம் - சங்கீ அகராதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சென்றார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஓராண்டுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றார். அந்த படத்தை இப்போது பதிவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வை மேற்கொண்டோம்.

Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2023ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி இந்த புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி ஊடகம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், "பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள புனித இருத ஆண்டவர் ஆலயத்துக்கு வந்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் அந்த நிகழ்வின் வேறு சில படங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: indiatvnews.com I Archive

இது தொடர்பாக வெளியான செய்திகளில், "ஈஸ்டர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள புனித இருதய ஆண்டவர் கதீட்ரலுக்கு வந்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நரேந்திர மோடி 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார் என்ற தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

கிறிஸ்தவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, தேர்தல் வந்ததும் அவர்களுடன் சென்று போட்டோ எடுத்துக்கொண்ட மோடி என்று பரவும் புகைப்படம் 2023ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தேர்தலுக்காக கிறிஸ்தவ தேவாலயம் சென்ற மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading