‘குஜராத் மாநில கழிவறைகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?   

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘‘குஜராத் மாநில கழிவறைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’பாதுகாப்பான உரசிக் கொள்ளாத சரியான இடைவெளியில் , சிறந்த பொறியாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட #குஜராத்_மாநில கழிவறைகள்… #Digital_India_Kujarat,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற உள்ளதால், சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றியும் வித விதமான வதந்திகள் பகிரப்படுகின்றன. 

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் பற்றிய தகவலும்; ஆம், இதற்கும், குஜராத் மாநிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஏமன் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஏற்கனவே இதுபற்றி கடந்த அக்டோபர் 22, 2019 அன்று ட்விட்டரில் வெளியான பதிவு இதோ…

Tweet Link l Archived Link 

இதன்படி, மேற்கண்ட பதிவை பகிர்ந்த நபர் ஒரு ஊடவியலாளர் என்பதால், அவர் கண்டிப்பாக, தான் வசிக்கும் பிராந்தியத்தில் நடைபெறும் செய்தியைத்தான் பகிர்ந்திருப்பார் என்று தெளிவாகிறது.

இந்த ட்விட்டர் பதிவில் உள்ள தகவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தோம். அப்போது, ‘’செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து, அரபு நாடுகளில் சமூக தொண்டுப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான UAE Red Crescent மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு ஏமன் நாட்டிற்கு செய்துவந்த மனிதாபிமான உதவிகளை நிறுத்திக் கொள்வதுடன், அங்கு நிறுவியிருந்த பொது கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை திருப்பி எடுத்துச் செல்வதாக,’’ அர்த்தம் கிடைத்தது.  

News Link 

எனவே, ஏமன் நாடு தொடர்பான பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து, ‘குஜராத் மாநில கழிவறைகள்’ என்று கூறி, மக்களவைத் தேர்தலையொட்டி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘குஜராத் மாநில கழிவறைகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?   

Written By: Fact Crescendo Team 

Result: Misleading