2021 சட்டமன்ற தேர்தலில் கனிமொழி அளித்த வாக்குறுதி என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘2021 சட்டமன்ற தேர்தலில் கனிமொழி அளித்த வாக்குறுதி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழ்நாடு அரசாங்கம் – இதையும் கொஞ்சம் பாருங்க மக்களுக்கு பயன்படும். கொடுத்த வாக்கு உறுதிகள் i) 500 ருபாய் கேஸ் சிலின்டர் ii) பெட்ரோல் 75 ருபாய் iii) டீசல் 65 ருபாய் iv) விவசாய கடன் ரத்து v) கல்வி கடன் ரத்து vi) டோல்கேட் மூடப்படும் நீட் ரத்து – இன்னும் எத்தனை காலம் யாருக்கு தெரியும்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும், இதற்கும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்றும் தெரியவந்தது. 

இதன்படி, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் கனிமொழி தேர்தல் பரப்புரை செய்த வீடியோவை எடுத்து, 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பானது என்று கூறி, வதந்தி பரப்புகிறார்கள். 

முழு வீடியோ லிங்க் இதோ…

கூடுதல் ஆதாரத்திற்காக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:2021 சட்டமன்ற தேர்தலில் கனிமொழி அளித்த வாக்குறுதி என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply