தவெக.,வில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’ஆதவ் அர்ஜூனா தவெக.,வில் இருந்து இடைநீக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து ‘ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்…’,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன், News J பெயரில் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, தவெக., சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட X வலைதள பதிவு இதோ… 

இதுபற்றி மற்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 

Polimer News l Times Now Seithi 

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், அடிப்படை ஆதாரமற்ற ஒரு வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:தவெக.,வில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False