‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் கீழே தந்தி டிவி வெளியிட்ட செய்தி ஒன்றின் லிங்க் retweet செய்யப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Claim Link

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட பதிவை பார்ப்பதற்கு, நடிகர் விஜய் இதனை வெளியிட்டது போன்று உள்ளது. ஆனால், உண்மையில் அவர் இவ்வாறு வெளியிடவில்லை. இது விஜய் பெயரில் செயல்படும் parody account வெளியிட்ட பதிவு.

மேற்கண்ட ஐடி.,யின் பெயரில் TVK என்பதற்குப் பதிலாக VTK (@vtkvijayhq) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் தொடங்கியுள்ள TVK கட்சியின் தலைமைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஐடி., பெயர் @tvkvijayhq என்று உள்ளது. மேலும், தங்களது ஐடி., முகப்பு பக்கத்தில் PARODY ACCOUNT என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், உண்மையான ஐடி., லிங்க் வேறொன்று. அதனுடன் போலியான ஐடி.,யின் முகப்புப் பக்கத்தையும் ஒப்பீடு செய்து, கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, போலியான ஐடி., வெளியிட்ட பதிவை எடுத்து, நடிகர் விஜய் கட்சியின் தலைமைக்கழகம் புஸ்ஸி என்.ஆனந்த் பற்றி வெளியிட்ட உண்மையான பதிவு என்று குறிப்பிட்டு சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False