தமிழகத்திற்கு நல்ல அரசியல் தலைவர் தேவை என்பதால் புஸ்ஸி ஆனந்தை நான் கொண்டு வருகிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் - பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "புஸ்ஸி ஆனந்த் ஒரு நல்ல தலைவர் - விஜய். தமிழகத்துக்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை. எனவே தான் புஸ்ஸி ஆனந்தை நான் கொண்டு வருகிறேன். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் சான்றிதழ் பரிசுகளை ஜூன் 28, 2024 அன்று வழங்கினார்.

Hindu Tamil Link

இந்த விழாவில் அவர் பேசும் போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று எந்த கருத்தையும் அவர் கூறவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெரிந்தது.

இருப்பினும் இதை ஆதாரங்கள் அடிப்படையில் தவறானது என்று உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை. இதை உறுதிசெய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று வாட்ஸ் ஆப் மூலம் நம்மிடம் உறுதி செய்தார்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அதைத் தொடர்ந்து இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என 'FAKE NEWS' என்று முத்திரை குத்தி, புதிய தலைமுறை இணையதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிடிருப்பதாக நமக்கு லிங்க்-கை அனுப்பினார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த் நல்ல தலைவர் என்பதால் அவரை தமிழகத்திற் அழைத்து வருகிறேன் என்று விஜய் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழகத்துக்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை எனவே தான் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்று நடிகர் விஜய் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘தமிழகத்திற்கு புஸ்ஸி ஆனந்த் போன்ற நல்ல தலைவர் தேவை’ என்று விஜய் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False