
கர்நாடகா ஹிஜாப் மாணவியின் உண்மை முகம் என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் கர்நாடகாவில் இந்து மத ஆதரவாளர்களுக்கு மத்தியில் மாணவி ஒருவர் துணிச்சலாக அல்லஹூ அக்பர் என கோஷமிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள், செய்திகள் ஊடகங்களிலும் பரவின.
இந்த நிகழ்வை மையப்படுத்தி, குறிப்பிட்ட கர்நாடகா மாணவியின் பெயரில் ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. அவற்றில் பலவும் வதந்தியாகவே உள்ளன. இதுபற்றி நாமும் ஆய்வு செய்து, அவ்வப்போது, செய்தி வெளியிட்டு வருகிறோம்.
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட புகைப்பட தகவலும். உண்மையில், அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமான மாணவியின் பெயர் முஷ்கான். அவருக்கும், இந்த புகைப்படத்தில் மாடலாக நிற்கும் முகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அடுத்தப்படியாக, இதில் பகிரப்பட்டுள்ள முகம், நஜ்மா நசீர் என்பவர். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஜனதா தளம் கட்சி சார்பான, இளம் சமூகப் போராளி, எழுத்தாளர் ஆவார். ஆனால், இவரும் இப்படி எந்த மாடலிங் புகைப்படத்தை வெளியிடவில்லை. இவரது முகத்தையும் எடிட் செய்துள்ளனர்.
உண்மையில், இதில் இருக்கும் மாடல் பெண் தான்யா ஜெனா ஆவார். அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை எடுத்து, நஜ்மாவின் முகத்தைச் சேர்த்து, எடிட் செய்து இந்த வதந்தியை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:அல்லாஹூ அக்பர் கோஷமிட்ட கர்நாடகா மாணவியின் உண்மை முகம் இதுவா?
Fact Check By: Pankaj IyerResult: False
