கொலை செய்ய விரும்பு; கேலி என்ற பெயரில் பாஜக மீது பகிரப்படும் தவறான போஸ்டர்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’கொலை செய்ய விரும்பு – பாஜக,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளம் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட போஸ்டர் ஃபேஸ்புக்கில் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. பாஜக சின்னத்துடன் உள்ளதால், தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இந்த போஸ்டர் சமூக வலைதள பயனாளர்களை குழப்பும் வகையில் உள்ளது. பாஜக.,வே இப்படி சுய விளம்பரத்திற்காக, போஸ்டர் அடித்து வெளியிட்டதா என்று கூட சிலர் குழப்பமடைந்துள்ளனர்.

ஆனால், இதனை பாஜக வெளியிடவில்லை. அக்கட்சியை கேலி செய்யும் நோக்கில், சிலர் வேண்டுமென்றே இப்படி ஆத்திச்சூடி வாசகங்களை வரி மாற்றி எழுதி, பகிர்ந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காலக்கட்டம் என்பதால், இந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு காணப்படுகிறது.

அதேசமயம், இதனை யாரும் உண்மை என நம்பி பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கொலை செய்ய விரும்பு; கேலி என்ற பெயரில் பாஜக மீது பகிரப்படும் தவறான போஸ்டர்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Satire