மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தாரா பிரபாகரன்?

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’ மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த பிரபாகரனும் ஒரு துரோகிதான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Tweet Claim Link l Archived Link 

இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம். 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட புகைப்படம் பார்க்க உண்மையை போன்றே உள்ளது. ஆனால், சற்று கவனித்தால் பிரபாகரனின் முகம் மட்டும் செயற்கையாக வெட்டி சேர்க்கப்பட்ட ஒன்றைப் போன்றுள்ளது. 

தவிர, இந்த புகைப்படத்தில் Sri Lanka Guardian என்ற லோகோவும் இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி அந்த ஊடகம் சார்பாக ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டதா என்று விவரம் தேடினோம். அப்போது நமக்கு கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியன்று வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. 

srilankaguardian link

ஏப்ரல் 1 பொதுவாக, உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில் உலக மக்கள் உண்மை போன்றே பேசி, ஒருவரை ஒருவர் ஏமாற்றும் வகையில் நடந்துகொள்வது வழக்கம். இதுபோலவே, Sri Lanka Guardian ஊடகம் ஏப்ரல் 1, 2008 அன்று வெளியிட்ட பகடி செய்திதான் மேற்கண்ட ஒன்றும். அதில் உள்ள புகைப்படமும் பகடி நோக்கில் வெளியிடப்பட்ட ஒன்றே.

ஏனெனில், இந்த செய்தி வெளியிடப்பட்ட காலத்தில் (2008-09) இலங்கையில் அரசு தரப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடைபெற்றது.

எனவே, இதனை பகடி செய்யவே இவ்வாறு ராஜபக்‌ச மற்றும் பிரபாகரன் பெயர் கூட்டாக, நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும், அவர்கள் சந்திப்பு நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு இவ்வாறான செய்தியை Sri Lanka Guardian ஊடகம் வெளியிட்டுள்ளது. இதுபற்றி நமது இலங்கைப் பிரிவினர் அந்த ஊடகம் தரப்பில் பேசி, உறுதி செய்துள்ளனர்.

அடுத்தப்படியாக, ராஜபக்ச மற்றும் பிரபாகரன் இருவரும் நேரில் சந்தித்துப் பேசினார்களா என்று நாம் விவரம் தேடினோம். இதுதொடர்பாக, நமது இலங்கைப் பிரிவினர் மகிந்த ராஜபக்சவின் உதவியாளரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அவர், இதுபோன்ற சந்திப்பு எதுவும் இருவருக்கும் இடையே நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தார். இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அதிபராக ராஜபக்ச பதவி வகித்த காலத்தில், அதிபர் மற்றும் பிரதமரின் அலுவலகமாகப் பயன்படுத்தப்படும் Temple Trees வளாகத்தில் அவர் வீற்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படத்தை வைத்து இவ்வாறு எடிட் செய்துள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தாரா பிரபாகரன்?

Written By: Fact Crescendo Team 

Result: Altered