புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘‘ராம நவமி அன்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Tweet Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

துபாயில் அமைந்துள்ள burj khalifa ஒரு ஆடம்பர ஓட்டல் ஆகும். இதன் கட்டிடம் 796 அடி உயரம் கொண்டதாகும். இந்த கட்டிடத்தில் உலக அளவில் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெறும்போது, அதனை மையப்படுத்தி, அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படம் லேசர் முறையில் இதன் மீது ஒளிரும்படி செய்வார்கள். 

இந்த வரிசையில் ராம நவமி (30/03/2023) அன்று, புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதாக, சிலர் தகவல் பகிர்ந்து வருகிறார்கள். 

உண்மையில், அவ்வாறு நடைபெற்றதாக, எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. எனவே, இது ஒரு தவறான தகவலாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. 

இதன்பேரில் குறிப்பிட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்தபோது, இது எடிட் செய்யப்பட்ட படம் என்ற விவரம் தெரியவந்தது. ஆம், உண்மையான புகைப்படம் கீழே தரப்பட்டுளளது. இரவு நேரத்தில் புர்ஜ் கலிஃபா கட்டிடம் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏற்கனவே 2015ல் எடுக்கப்பட்டு, ஆன்லைனில் விற்பனக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் ஒன்றை எடுத்து, இவ்வாறு எடிட் செய்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

dreamstime.com link 

உண்மையான படத்தையும், நாம் ஆய்வு செய்யும் படத்தையும் எடிட் செய்து, கீழே இணைத்துள்ளோம். 

burj khalifa night view என்று கூகுளில் டைப் செய்து தகவல் தேடினால் இதுபோன்ற நிறைய புகைப்படங்களை பார்க்கலாம். 

Istockphoto link 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: ALTERED