FactCheck: சவுக்கு சங்கர் இறந்துவிட்டதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிடவில்லை!

சமூகம் தமிழ்நாடு

‘’சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது சாட்போட் எண் மூலமாக அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link Archived Link 2

உண்மை அறிவோம்:
ட்விட்டரில் சர்ச்சையான கருத்துகளைக் கூறி, பாஜக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினருடன் மோதலில் ஈடுபடுவதன் மூலமாக பிரபலமானவர் சங்கர். சவுக்கு சங்கர் என்ற பெயரில் இவர் பகிரும் கருத்துகளுக்கு, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு உள்ள சூழலில், சில நாட்களாக, அவர் பாஜக.,வினருக்கு எதிராக கருத்து கூறிவருகிறார்.

இதன்பேரில், அவர் இறந்துவிட்டதாக, பாஜகவினர் சிலர் தகவல் பரப்ப, அதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், அவர் உயிருடன்தான் உள்ளார். அவரே, இந்த பதிவுகளுக்கு விளக்கம் அளித்து தகவல் பகிர்ந்தும் வருகிறார்.

Archived Link

இதேபோல, நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா சாரங்கராஜை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவரும், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று மறுப்பு தெரிவித்தார். 

எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கண்ட செய்தி பரப்பப்பட்டு வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:சவுக்கு சங்கர் இறந்துவிட்டதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிடவில்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •