
‘’HulkHogan மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இரண்டு நாள் கழித்து மறைந்த
#HulkHogan க்கு பனையூரில் அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் JV.. 😭
தவெகவினர் நெகிழ்ச்சி…❤️,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே, அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே விஜய் பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது.
இதன்படி, 2024ம் ஆண்டு பெரியார் ஈவெரா புகைப்படத்திற்கு நடிகர் விஜய் மரியாதை செலுத்தினார். அந்த புகைப்படத்தையே தற்போது எடுத்து, வேண்டுமென்றே எடிட் செய்து வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
Puthiyathalaimurai Link l Maalaimalar Link
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், உண்மையான புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
