திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டதா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ குவாட்டர் பாட்டில்.! திமுக இளைஞரணி மாநாட்டில் ஒவ்வொரு இருக்கையிலும் ”Quarter Bottle” வைத்து இளைஞர்களை தவறாக வழிநடத்தும் திமுகவினர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில் நாம் திமுக ஐடி., பிரிவு தரப்பில் விளக்கம் கேட்டபோது, ‘’இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், உண்மையானதல்ல,’’ என்று தெரிவித்தனர். 

மேலும், உண்மையான புகைப்படத்தின் லிங்க் நமக்கு கொடுக்கப்பட்டது. அதில் வேண்டுமென்றே குவாட்டர் பாட்டில் படத்தை சேர்த்து, எடிட் செய்துள்ளனர், என்று தெளிவாகிறது. 

X Post Link 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered