
கேரம் விளையாட்டில் ஸ்டிரைக்கருக்கு பதில் கருப்பு காயினை வைத்து ஸ்டாலின் விளையாடியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரம் விளையாடியது தொடர்பாக வௌியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு லக்கணத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் ஸ்டரைக்கரிலும் கேரம் ஆடலாம் black coin னிலும் ஆடலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரம் விளையாட்டில் ஸ்டிரைக்கரைப் பயன்படுத்துவதற்கு பதில் கருப்பு காயினை வைத்து மற்றொரு கருப்பு காயினை அடித்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சிறிய விஷயம் கூட தெரியாமல் கேரம் விளையாட வந்துவிட்டார் என்பது போன்று ஸ்டாலினை நையாண்டி செய்து பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவை வௌியிடவில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
திருச்சியில் அன்பு சோலை திறக்கப்பட்ட போது இந்த செய்தி வெளியாகி இருந்தது. எனவே, பாலிமர் டிவி-யில் இது தொடர்பாக வெளியான வீடியோவை தேடி எடுத்தோம். அதில் கருப்பு காயினை எடுத்து விளையாடியது போல இல்லை.

பாலிமர் மட்டுமின்றி மற்ற ஊடகங்களில் வெளியான வீடியோக்களையும் ஆதாரமாக வைத்துள்ளோம். அவர் ஸ்டிரைக்கரை வைத்து விளையாடுவது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ காட்சியை எடுத்து, எடிட் செய்து கருப்பு காயினை வைத்து போலியான புகைப்படத்தை உருவாக்கியிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கருப்பு காயினை ஸ்டிரைக்கராக வைத்து விளையாடிய ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:கருப்பு காயின் வைத்து கேரம் விளையாடிய ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered


