நடிகர் விஜய் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’வெற்றி பெற்ற RCB மகளீர் அனி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தவெக கட்சித் தலைவர் விஜய் மேலும் 100 கோடி நிர்வாண பரிசும் வழங்கவுள்ளார்,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

சன் நியூஸ் லோகோ உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடியபோது சன் நியூஸ் வெளியிட்ட செய்தி வேறொன்றாக இருந்தது.

‘RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி,’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

இதனை எடிட் செய்தே மேற்கண்ட வகையில் வதந்தி பரப்புகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:நடிகர் விஜய் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்து கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered