நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் தி.மு.க இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களையும் கைப்பற்றும் என்று உள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு ஊடகமும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகமும் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது. தி.மு.க கூட்டணி 36 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 2 இடங்களையும், பா.ஜ.க கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 39 இடங்களையும் தி.மு.க கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம்.

Archive

டைம்ஸ் நவ் வெளியிட்டிருந்த செய்தியின் பதிவை அதன் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம். அதன் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியான பதிவு நமக்குக் கிடைத்தது. அதில் மிகத் தெளிவாக பாஜக 1, இந்தியா 36, அதிமுக 2, மற்றவை - 0 என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் டைம்ஸ் நவ் செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை எடிட் செய்து, 39 இடங்களையும் திமுக கைப்பற்றும் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களை கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டது என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Written By: Chendur Pandian

Result: Altered