அதிமுக-வை டயருடன் ஒப்பிட்டாரா அண்ணாமலை?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

அ.தி.மு.க வை டயருடன் ஒப்பிட்டு “வண்டி ஓட டயர் முக்கியம்” என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “டயர் முக்கியம் – அண்ணாமலை வண்டி ஓடவேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம்.டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்” என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதிமுக-வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவோம் என்பது போல அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு உள்ளது. உண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை அண்ணாமலை. உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்பது போல பேசியிருந்தார்.

எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். மார்ச் 26, 2025 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை. இதை உறுதி செய்ய, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கும் அனுப்பி இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்தோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

“வண்டி ஓட டயர்களும் தேவை” என்று அதிமுக-வை டயருடன் ஒப்பிட்ட அண்ணாமலை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:அதிமுக-வை டயருடன் ஒப்பிட்டாரா அண்ணாமலை?

Fact Check By: Chendur Pandian 

Result: False