
தமிழக அரசைக் கண்டித்து சாகும் வரை நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அர்ஜூன் சம்பத் அறிக்கை. தமிழக அரசின் அராஜக போக்கை கண்டித்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக சாகும்வரை “நிர்வாண ஜலகிரீடை” போராட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இதை S.Saravanan @SSaravanan14665 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 28ம் தேதி பதிவிட்டிருந்தார். ஃபேஸ்புக்கில் இந்த பதிவு பகிரப்படுகிறதா என்று தேடிய போது, பலரும் இதை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
அர்ஜுன் சம்பத் நிர்வாண போராட்டம் அறிவித்தார் என்று தொடர்ந்து போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் இப்படி ஏதும் அறிவிப்பை அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ளாரா என்று அறிய அவரது சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அவற்றில் இப்படி எந்த பதிவும் இல்லை. இந்து மக்கள் கட்சியின் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அதிலும் கூட இப்படி எந்த அறிவிப்பும் இல்லை. அர்ஜுன் சம்பத் இப்படி அறிவித்தாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

அடுத்ததாக கதிர் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, அந்த ஊடகத்தின் நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். அவரும், இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் நிர்வாண போராட்டம் அறிவித்தாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சாகும் வரை நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் என்று அர்ஜுன் சம்பத் அறிவித்தாரா?
Written By: Chendur PandianResult: False
