காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாரா சீமான்?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக சீமான் ரூ.10 கோடி பணம் பெற்றார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலம் நடிகர் சீமான் அவர்களுக்கு 10 கோடி பணம் பரிமாற்றம் அம்பலம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை குறிஞ்சி வேந்தன் பாரதம் என்பவர் 2020 ஜூலை 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருபவர் சீமான். ராஜீவ் காந்தியையே நாங்கள்தான் கொன்றோம் என்று அதிர்ச்சி கொடுத்தவர். தேசத்துரோக வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர். அவருக்கு காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்தது என்று சொல்வது அதிர்ச்சி அளித்தது. பலரும் சில ஆண்டுகளாகவே இதை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.

asianetnews.comArchived Link

இந்த நியூஸ் கார்டு 2017ம் ஆண்டு வெளியிடப்பட்டது போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டில் நடிகர் சீமான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் திரைப்படங்களில் நடித்தாலும் இயக்குநராகவே மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர். நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் என்றே அவரை அழைப்பது வழக்கம்.

அதே போல், சீமான் அவர்களுக்கு என மிகவும் மரியாதையாக குறிப்பிட்டுள்ளனர். ஊடகங்களில் இது போன்று குறிப்பிடுவது இல்லை. மேலும் இந்த தமிழ் ஃபாண்ட் வழக்கமான நியூஸ்18 தமிழ்நாடு பயன்படுத்தும் ஃபாண்ட் போல இல்லை. எனவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மையில் இது தொடர்பாக நியூஸ்18 செய்தி ஏதும் வெளியிட்டதா என்று தேடினோம்… நமக்கு எந்த ஒரு துண்டு செய்தி கூட கிடைக்கவில்லை. தமிழ் ஊடகங்களில் இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

எனவே, நியூஸ் 18 தமிழ்நாடு ஆன்லைன் பிரிவைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அப்போது, அவர்கள் இதை நாங்கள் வெளியிடவில்லை. இது போலியானது என்று கூறினர். 

நம்முடைய ஆய்வில், சீமானுக்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ மூலம் பணம் வழங்கப்பட்டது என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 18 தமிழ்நாடு உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாரா சீமான்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •