‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…
‘’ மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சனியன் புடிச்சவன் ஆட்சியில என்ன என்ன கொடுமை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு பாருங்க.
சிந்திக்க கற்றுக்கொடுக்காட்டியும் மென்மேலும் முட்டாளாகாமல் இருங்கடா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். முதலில், இந்த படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு சில ஆதாரங்கள் கிடைத்தன.
இதன்படி, இந்த வீடியோவில் மாட்டு சாணி எதுவும் பயன்படுத்தவில்லை. மாறாக, கஞ்சா செடியின் இலைகளை அரைத்து, பொடி அல்லது சாறு வடிவில் சேர்த்து, தேவையான அளவு பழங்கள், இனிப்பு அல்லது மசாலா கலந்து தயாரிக்கப்படும் பாங் பானம்தான் இது. வட இந்திய மாநிலங்களில், இந்த பானம் ஒருவகை ‘உற்சாக பானம்’ போல பயன்படுத்தப்படும் ஒன்று. இதற்கு தடை எதுவும் கிடையாது.
குறிப்பிட்ட வீடியோவில் உள்ள லோகோவை பயன்படுத்தி, தகவல் தேடினோம். அப்போது நமக்கு YourBrownFoodie என்ற யூ டியுப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த உண்மையான வீடியோ லிங்க் கிடைத்தது.
இது மட்டுமின்றி மேலும் சில யூ டியுப் சேனல்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம். அனைத்திலுமே, பாங் பானம் தெருவோரம் விற்பனை செய்யப்படும் காட்சி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, வட இந்திய மாநிலங்களில் விற்கப்படும் பாங் பானம்தான் இது என்று நமக்கு தெளிவாகிறது. இவ்வித பாங் உருண்டைகள் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோன்று, பாங் பால் விற்பனையும் வட இந்தியாவில் இயல்பான ஒன்றுதான்.
எனவே, மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள் என்ற தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: False