‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது.

தந்தி டிவி லோகோ இடம்பெற்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் தந்தி டிவி ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி. அதேசமயம், அண்ணாமலை பற்றி மேற்கண்ட புகைப்படத்துடன் நாங்கள் வேறொரு செய்தி வெளியிட்டிருக்கிறோம். அந்த லிங்கை உங்களுக்கு தருகிறோம்,’’ என்றனர்.

அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த செய்தியுடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியை தந்தி டிவி வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: ALTERED