ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டாரா?

சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக ஒருவரை சமீபத்தில் மறைந்த ஈரான் அதிபர் தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஈரானில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படம், சிறுமி ஒருவர் அதை பார்ப்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுதியதற்காக ஈரான் […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பு விழாவை டெஸ்லா கார் நிறுவனம் கொண்டாடியதா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனம் கொண்டாடியது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் RAM (ராம்) என்று உருவாக்கிய வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 22ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Tesla held a Jai Shri Ram Light & Music show in […]

Continue Reading

புர்ஜ் கலிஃபாவில் ராமர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது ராமர் புகைப்படம் காண்பிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது ராமர் தெரிவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஒரிஜினல் முஸ்லிம்கள் வாழும் துபாய் புர்ஜ் கலிபாவில் ஜெய் ஸ்ரீ ராம்!!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மசூத் அசார் குண்டுவெடிப்பில் இறந்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா தேடும் பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவாக இல்லாத, குண்டு வெடிப்பு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் ஜனவரி 1, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “முடிஞ்சு… 2024 இன் முதல் கணக்குத் தொடக்கம்: காந்தகார் விமானக் கடத்தல்காரன், ஜெய்ஷ் இ முஹம்மத் […]

Continue Reading

ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

2024ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி ஜப்பானை தாக்கிய சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜப்பானில் சுனாமி தாக்கிய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஜப்பானில் 01.01.2024 ஏற்பட்ட சுனாமி அலையின் ஒரு காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மை அறிவோம்: 2024 ஜனவரி 1ம் […]

Continue Reading

ஜப்பான் சுனாமி என்று பரவும் பழைய வீடியோவால் பரபரப்பு!

ஜப்பானை தாக்கும் சுனாமி அலைகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுனாமி தாக்குதலில் படகுகள், சிறிய கப்பல்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 1ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “Big breaking: சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் […]

Continue Reading

காசா அல் ஷிபா மருத்துவமனையில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்த ஆயுத குவியல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அறை முழுக்க அதிநவீன ஆயுதங்கள் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அல் ஷிபா மருத்துவமனையி ல் உள்ள ஆயுதங்கள்- காசாவில் உள்ள அல் ஷிபா ஹாஸ்பிடலில் இருக்கும் ரகசிய அறைகளில் ஏகப்பட்ட […]

Continue Reading

இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் கொடூரமான மரணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் உடல் முழுக்க புழு வைத்து மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நோயாளி ஒருவருக்கு தலையில் போடப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் போது தலையில் புழுக்கள் நெளியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்ட […]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவிகள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் நாடகமாடியதா? 

இஸ்ரேல் போர்க் குற்றம் இழைப்பதாக பாலஸ்தீனியர்கள் போலியாகக் குற்றம் சாட்டுகின்றனர், உலக மக்களை ஏமாற்ற பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தது போல நடிக்க வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உயிரிழந்த உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் போர்க்குற்றம் இழைப்பதாக பாலஸ்தீன காசா […]

Continue Reading

ஹமாஸ் தாக்குதலுக்கு பயப்படும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் போராளிகளுக்குப் பயந்து காசாவுக்குள் நுழையத் தயங்கிய இஸ்ரேல் தரைப்படை வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில ராணுவ வீரர்கள் ஒரு சுற்றுக்கு அருகே பதுங்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சில ராணுவ வீரர்களை உயர் அதிகாரி தலையில் அடிக்கும் வகையில் அந்த வீடியோவில் […]

Continue Reading

‘இஸ்ரேல் படையினரை வேட்டையாடும் ஹமாஸ்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் படையினரைத் தேடித் தேடி வேட்டையாடும் ஹமாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கை பாலஸ்தீன படையினர் தாக்கி கைப்பற்றுவது போன்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேல் படையினரை தேடி தேடி வேட்டையாடும் ஹமாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ 2023 அக்டோபர் 31ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

பிரான்சில் குரானை அவமரியாதை செய்த யூதர் என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரான்சில் யூதர் ஒருவர் கையில் இஸ்ரேல் கொடியை பிடித்துக்கொண்டு குரானை காலில் போட்டு மிதித்து அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் கொடியை கையில் பிடித்தபடி, குரானை மிதித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யூதன் ஒருவன் இஸ்ரேலிய கொடியை பிடித்து கொண்டு குர்ஆனை […]

Continue Reading

குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

காஸாவில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசி எரித்துக் கொன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகப்பெரிய டேங்கர்கள் மீது மேலே இருந்து குண்டு போடப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கீழே இருந்தவர்கள் தீப்பிடித்து சிதறி ஓடுகின்றனர். நிலைத் தகவலில், “இதை விட இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தனத்தை […]

Continue Reading

பயம் காரணமாக புதின் – கிம் ஜாங் உன் மது கோப்பையுடன் தடுமாறியதாக பரவும் வீடியோ உண்மையா?

மது கோப்பையில் விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில் புதினும் கிம் ஜாங் உன்னும் திகைத்து நின்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஷ்ய அதிபர் புதினும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கையில் மது கோப்பையை வைத்துக்கொண்டு யார் முதலில் அருந்துவது என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி திகைத்து நிற்பது […]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியை பயன்படுத்துகிறார்களா?

இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்கள் சிலர் இந்தியக் கொடியுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்கள்.. இது தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி […]

Continue Reading

பாலஸ்தீன மக்களை தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்ததா எகிப்து?

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காரணமாக பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க எகிப்து 36 அடி உயர முள் வேலியை அமைதித்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான மதில் சுவரை தாண்டிக் குதிக்க ஆயிரக் கணக்கானோர் முயற்சி செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “100% முஸ்லீம் நாடான எகிப்து, […]

Continue Reading

பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டதா?

இஸ்ரேலில் உள்ள ஒரு தேவாலயத்தில் இஸ்ரேல் கொடியை இறக்கிவிட்டு பாலஸ்தீன கொடியைக் கிறிஸ்தவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடத்தின் உச்சியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக் கொடி கழற்றப்பட்டு பாலஸ்தீன கொடியை ஒருவர் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்தவர்கள்‌ இஸ்ரேல் கொடியை இறக்கி பாலஸ்தீனின் கொடியை ஏற்றிய […]

Continue Reading

இஸ்ரேல் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஹமாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் ஹெலிகாப்டரை ஹமாஸ் அமைப்பினர் சுட்டு வீழ்த்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹமாஸ் முழு ஆயத்துடனேயே போரை ஆரம்பித்துள்ளது. இது இஸ்ரேலிய விமானம் சூட்டு வீழ்த்தும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Vidiyal என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ…

ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதலில் காசா பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நொறுக்கப்படும் காசா …ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை […]

Continue Reading

இஸ்ரேலுக்குள் இறங்கிய ஹமாஸ் படை என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாராஷூட்டில் வீரர்கள் தரையிறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “PUBGல வர்ற மாதிரி இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 […]

Continue Reading

மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது […]

Continue Reading

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீதியில் தூங்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடு இழந்து தெருவில் உறங்கும் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மைதானத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் தூங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மொரோக்கோ பூமி அதிர்வினால் வீடு வாசல் சொத்து செல்வம் என்று அனைத்தையும் இழந்து வெரும் கையுடன் தெருவில் […]

Continue Reading

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஆற்றில் திடீரென்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிபீயாவில் அணை ஒன்று தகர்ந்து வரும் பெரு வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

மொரோக்கோ நிலநடுக்கத்தில் இடிந்து விழும் கட்டிடம் என்றும் பரவும் வீடியோ உண்மையா?

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடம் இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மொராக்கோ பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ […]

Continue Reading

வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு என்று பரவும் வீடியோ உண்மையா?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இந்து மத வழிபாடு நடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் வழிபாட்டை நடத்துகின்றனர். நிலைத் தகவலில், “நமது ஹிந்து தர்மம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்றுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் […]

Continue Reading

ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலவில் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் பூஸ்டர் எனப்படும் நீண்ட சிலிண்டர் போன்று ஒன்று விழுந்து வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவுக்கு முன்னாதாக நிலவை அடைவோம் என பயணித்த ரஷ்யாவின் லூனா-25 நிலவில் விழுந்தது காட்சி” […]

Continue Reading

உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உக்ரைனில் பிரிட்டிஷ் சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive  சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் நாட்டில் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உக்ரைனின் ஒடெசா துறைமுகம், தரைக்குக் கீழே இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்களைத் தாக்கிய நான்கு ரஷ்ய […]

Continue Reading

அமெரிக்காவில் ஒரே பாலினத் திருமணம் நடந்த தேவாலயம் மீது மின்னல் தாக்கியதா?

அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்த போது, அந்த தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி எரிந்து அழிந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் “ஜூன் 3, […]

Continue Reading

பிரான்சில் தொடரும் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரான்சில் தற்போதைய நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அல்ஜீரியா கொடியுடன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்சில் பாரிசின் தற்போதைய நிலை. அங்கு தொடா்ந்து மோதல் நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை இந்திய இராணுவச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளது. […]

Continue Reading

ஆமையைக் காப்பாற்ற மனிதர்களிடம் உதவி நாடிய சுறா என்று பரவும் வீடியோ உண்மையா?

கடலில் நைலான் கயிற்றில் சிக்கிக்கொண்ட ஆமையை சுறா மீன் ஒன்று காப்பாற்ற முயற்சி செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் ஆமை ஒன்றை சுறா மீன் கடிக்க முயற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. படகில் அந்த ஆமையை ஏற்ற சுறா மீன் முயல்வது போன்று காட்சி உள்ளது. ஆமையின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்று […]

Continue Reading

FactCheck: செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன்?

செக்ஸை ஸ்வீடன் நாடு விளையாட்டாக அங்கீகரித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்? உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரலாறு படைத்துள்ளது ஸ்வீடன்! முதலாவதாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 8ல் தொடங்கி, 6 […]

Continue Reading

சுறா மீன் கப்பலை தாக்கும் காட்சி என்று பரவும் கிராஃபிக்ஸ் வீடியோ!

ராட்சத மீன் ஒன்று கப்பலை தாக்கி அழிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive கிராஃபிக்ஸ் வீடியோ போல் உள்ளது. அதில் சுறா மற்றும் திமிங்கிலம் என இரண்டும் கலந்த கலவை போல் உள்ள மீன் ஒன்று கப்பலை தாக்கி இரண்டாக உடைக்கிறது. இந்த காட்சியை ஒளிப்பதிவு செய்த ஹெலிகாப்டரையும் தாக்கி கடலுக்குள் வீழ்த்துகிறது. நிலைத் […]

Continue Reading

புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற டிசைனர் என்று நடிகை படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக எழுதியது என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சோனாலி பிந்த்ரேவின் இயல்பான புகைப்படம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் […]

Continue Reading

தாயின் அணைப்பில் உயிர் பெற்ற குழந்தை என்று பரவும் விளம்பர வீடியோ!

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர் பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரட்டைக் குழந்தைகள் மருத்துவமனை தொட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு குழந்தை அசைகிறது, மற்றொரு குழந்தை இறந்தது போல் உள்ளது. குழந்தையின் தாய், தந்தை அழுகின்றனர். மருத்துவரும் குழந்தையை எண்ணி வருந்துகிறார். அந்த குழந்தையை தூக்கி வைத்து தாய் கண்ணீர் […]

Continue Reading

போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கை அறை என்று பரவும் படம் உண்மையா?

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படும் போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கை அறை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போப் பிரான்சிஸ் படுக்கை அறைக்குள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் திருத்தந்தையின் அறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Sinnaiya Alexander என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 […]

Continue Reading

எகிப்து பிரமிடு அடியில் இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

எகிப்து பிரமிடு ஒன்றுக்கு அடியில் இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எகிப்து பிரமிடுக்கு அருகில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகழ்வாராய்ச்சியின் போது எகிப்தின் பிரமிடுகளுக்கு அடியில் ஒரு பழமையான இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரமிட்டின் கீழ் ஒரு இந்து சூரியக் கோயில் இருப்பதைக் காணலாம். மேலும் கோவில்களின் […]

Continue Reading

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கத்தின் போது அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்கள் புதைக்கப்படும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படும் அவலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீளமான குழியில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு வந்து போடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களை நீள குழிவெட்டி புதைக்கப்படும் அவலம்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Albert Fernando என்ற […]

Continue Reading

பாதி மனிதன், பாதி பன்றியாக பிறந்த விசித்திர குட்டி என்று பரவும் படம் உண்மையா?

கிராமத்தில் பாதி மனிதன் பாதி பன்றியாக விசித்திரமான உருவத்தில் பன்றிக் குட்டி ஒன்று பிறந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I theriuma.net I Archive 2 இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி பகிரப்பட்டுள்ளது. பன்றி போன்று தோற்றம் அளிக்கும் குழந்தை ஒன்றின் பல்வேறு புகைப்படங்கள் வைத்து செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

சௌதி அரேபிய வீடியோவை எடுத்து துருக்கி நிலநடுக்கக் காட்சி என்று தவறாக பரப்பும் நெட்டிசன்கள்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக இடிந்து விழும் கட்டிடங்கள் என்று பல வீடியோக்களின் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழும் பல வீடியோக்களை சேர்த்து ஒரே வீடியோவாக பதிவிட்டுள்ளனர். வீடியோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட – துருக்கி, […]

Continue Reading

பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தியதைக் கண்டித்து லண்டனில் போராட்டம் நடந்ததா?

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தியதைக் கண்டித்து, மோடி பதவி விலக வலியுறுத்தி லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோடி பதவி விலக வேண்டும் என்று கோரி லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஐடி ரெய்டு விட்டா உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க […]

Continue Reading

சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

சீன உளவு பலூனை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீன நாட்டின் உளவு பலூனை அமெரிக்க விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்துவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீன உளவு பலூனை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்திய வீடியோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை YJ Pondicherry […]

Continue Reading

துருக்கி நிலநடுக்கத்தின் அதிர்வை கார் கேமரா பதிவு செய்ததா?

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வை காரில் இருந்த கேமரா பதிவு செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் உள்ள கேமராவில் பதிவான நிலநடுக்கத்தால் வாகனங்கள், கட்டிடங்கள் குளுங்கும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி 🇹🇷 காரில் உள்ள கேமராவில் இருந்து பூகம்பத்தின் நேரடி பதிவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Mohamatu Hasan […]

Continue Reading

துருக்கியில் நிலநடுக்கத்தால் கட்டிங்கள் இடிந்து விழும் காட்சி என்று பரவும் பழைய வீடியோக்கள்!

சீனாவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் வீடியோக்களை இணைத்து, துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழும் குடியிருப்புக்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்படும் வீடியோக்களை ஒன்று சேர்த்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “துருக்கி நிலநடுக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை மனோ கேதீஸ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் […]

Continue Reading

அணு உலை வெடிப்பால் துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive லெபனானில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி 🇹🇷 சிரியா 🇸🇾  லெபனான் 🇱🇧 பூமி அதிர்ச்சியா அல்லது எதிரிகளின் சதியா ? கீழே உள்ள விடியோ […]

Continue Reading

நிலநடுக்கத்தில் சிக்கியவரை காக்கப் போராடும் நாய் புகைப்படம் துருக்கியில் எடுக்கப்பட்டதா?

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல ஆயிரம் பேர் உயிரிழந்த சூழலில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபருக்கு அருகில் நாய் கவலையுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே யாரோ ஒருவர் சிக்கிக்கொண்டது போன்றும் அவருக்கு அருகே நாய் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கியின் துயரம்!” என்று […]

Continue Reading

டென்மார்க் சென்ற பிரான்ஸ் அதிபருக்கு தரப்பட்ட எளிமையான வரவேற்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

பாதுகாப்பு என்று பல கோடிகளை செலவு செய்யாமல் மிகவும் எளிமையான முறையில் டென்மார்க் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் டென்மார்க் பிரதமருடன் சைக்கிளிங் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் சைக்கிளிங் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் அதிபர் மக்ரோன் டென்மார்க்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது,அவரை டென்மார்க் பிரதமர் வரவேற்கும் […]

Continue Reading

மோடி ஆவணப் படம்; பிபிசி-யை கண்டித்து லண்டனில் மக்கள் போராட்டம் நடத்தினார்களா?

இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக ஆவணப் படத்தை வெளியிட்ட பிபிசி-யை கண்டித்து லண்டனில் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொது மக்கள் பிபிசி-க்கு எதிராக போராட்டம் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. “ஷேம் ஆன் யூ” என்று கோஷம் எழுப்புகின்றனர். பெரிய திரையில் தோன்றும் பெண்மணி, “பிபிசி தொடர்ந்து பொய்களைப் பரப்பி […]

Continue Reading

ஒருமுறை பயன்படுத்தும் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?

ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த இருவருக்கு விற்பனையாளர் பேப்பர் செல்போனை அறிமுகம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் அளவு கொண்ட செல்போனில் இருந்து அழைத்தால் போன் பேச முடிகிறது, அதில் எழுதினால் நம்முடைய […]

Continue Reading