ராஜினாமா அறிவிப்பு வெளியிட உள்ள மோடி என்று பரவும் விஷம நியூஸ் கார்டு! 

தன்னுடைய பதவி விலகல் தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ வெளியிட்ட உள்ளார் நரேந்திர மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மீண்டும் பிரதமர் மோடி உரை! நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் […]

Continue Reading

கழுத்தில் சிலுவை; அமெரிக்கன் ஸ்கூல் விண்ணப்பம்… தவெக., விஜய் மகன் பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கழுத்தில் சிலுவை அணிந்து, அமெரிக்கன் ஸ்கூல் சேர விண்ணப்பிக்கும் தவெக., தலைவர் விஜய் மகன்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆங்கிலேயர்கள் படிக்கும் அமெரிக்கன் பள்ளியில் ஜோசப் விஜய்யின் மகனுக்கு எப்படி இடம் கிடைத்தது?அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் படிக்கும் பள்ளி […]

Continue Reading

மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இந்தியா வல்லரசு ஆயிடுச்சு* ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️  _ஆரிய வந்தேறி பார்ப்பனியம் எந்த அளவிற்கு மதவெறியை ஊட்டி வளர்த்திருக்கிறது பார்த்தீர்களா_ ❓’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி இதுவா?

‘’360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி: 3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது! […]

Continue Reading

“கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷமிட்டார்களா?

விஜய் மாநாட்டில் “கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ரசிகர்கள் சிலர் கடவுளே அஜித்தே என்று கோஷம் எழுப்புவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Kadavule Ajithey” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி இவரா?

‘’திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 140 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானியின் புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நம் Air India விமான ஓட்டுநருக்கு பாதம் பணிந்த நன்றிகள் 🙏👍🇮🇳🫡  #AirIndiaExpress  144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள் […]

Continue Reading

முகப்பு கண்ணாடி இன்றி இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் அரசு பேருந்து உள்ளது என்று தமிழ்நாடு அரசை கிண்டல் செய்யும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன் பக்க கண்ணாடி இல்லாத தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் மீது தனியாக, “தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் காற்றோட்டமான அமெரிக்க பேருந்துகள் தற்போது இயங்கப்பட்டு […]

Continue Reading

‘தென்காசியை சேர்ந்த 3 மாணவிகளை காணவில்லை’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’தென்காசியை சேர்ந்த மூன்று மாணவிகளை காணவில்லை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அனைத்து நண்பர்களும் உடனே பகிருங்கள்…தென்காசியை சேர்ந்த மூன்று மாணவிகளை காணவில்லை.தொடர்பிற்கு  8883640640’’, என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

துர்கா ஸ்டாலின் வெள்ளி பீரோ வாங்கியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

‘’வெள்ளி பீரோ வாங்கிய துர்கா ஸ்டாலின்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா அம்மா, மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ராக்கெட் தேவையா என்று கேட்டீர்கள். இப்போ வெள்ளியில் பீரோ தேவையா. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பீரோ.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

முஸ்லிம்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினாரா உதயநிதி?

துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முஸ்லிம்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முஸ்லிம்களுக்கும் தீபாவளிக்கும் என்னயா சம்பந்தம்..? சனாதனத்தை ஒழிக்க முஸ்லிம்களுக்கு தீபாவளி பட்டாசு – பரிசு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

விஜய் மாநாட்டுத் திடலில் கீர்த்தி, திரிஷா கட்அவுட் என்று பரவும் விஷம புகைப்படம்!

நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டுத் திடலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive நடிகர் விஜய், புஸ்சி ஆனந்த், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோருக்கு கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷை பெருந்தலைவி அம்மா, நடிகர் […]

Continue Reading

பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின் போது மல்லிகார்ஜுன கார்கேவை அனுமதிக்கவில்லையா?

வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி சென்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கதவுக்கு அருகே நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோவ் கதவ திறயா..! […]

Continue Reading

அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடிய வங்கதேச முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அஸ்ஸாம் மாநிலத்தில் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்திய வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பேரணியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அசாமில், வங்காளதேச மியான் முஸ்லிம்கள் குழு ஒன்று தனி நாடு கோரி பேரணியில் ஈடுபட்டது. […]

Continue Reading

எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார்’’ என்று கூறி நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நியூஸ் 18 தமிழ்நாடு லோகோவுடன் உள்ள இந்த வீடியோ செய்தியில், ‘’ எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்பி உதயகுமார் சர்ச்சை பேச்சு.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை […]

Continue Reading

உத்தரப்பிரதேச கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடு இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை பார்க்கும் போது சிறுபான்மையினர் போல உள்ளனர். நிலைத் தகவலில், “உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச், மஹராஜ்கஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சிக்கிய பாஜக பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மகாராஷ்டிரா மாநில பாஜக-வின் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜகவிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? கடவுளே மகாராஷ்டிரா: சரத் பவார் குழு தலைவர் ரோஹித் பவார் பண வீடியோ டுவிட்… ◆ ரோஹித் சொன்னார், “தேர்தலின் முதல் தவணையாக […]

Continue Reading

‘நிர்வாண பணிகளில் திருப்தியில்லை’ என்று நடிகை கஸ்தூரி கூறினாரா?

‘’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை’’ என்று நடிகை கஸ்தூரி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link 1 l Claim Link 2   இதில், ’’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை.இன்னும் சிறப்பாக செயல்படனும்‘’, என்று எழுதப்பட்டுள்ளது.   பார்ப்பதற்கு, நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் வலைதளத்தில் இவ்வாறு பதிவு வெளியிட்டது போன்று உள்ளது.   […]

Continue Reading

கோவிலில் பெண்ணின் நகை பறிப்பு வீடியோ தமிழகத்தை சார்ந்ததா?

தமிழக கோவில் ஒன்றில் பெண் ஒருவரின் நகையைத் திருடன் பறித்துச் சென்ற காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook கோவிலில் பெண்கள் பஜனை பாடல்களைப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அப்போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண் திடீரென்று கழுத்தைப் பிடித்துக் கொண்டு எழுகிறார். அவரது நகையை யாரோ ஜன்னலுக்கு வெளியே இருந்து திருடிச் சென்றிருப்பது தெரிகிறது. நிலைத் […]

Continue Reading

மழை வெள்ளத்தின் போது மு.க.ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தாரா?

மழை வெள்ளத்தில் மக்கள் அவதியுற்றபோது மு.க.ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook மு.க.ஸ்டாலின் ஏஐ ஏர் ஹாக்கி விளையாடிய பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழையாவதுமசுராவது ….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: சென்னையில் 2024 அக்டோபர் 15ம் தேதி கன மழை […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டதா?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் விழுந்த வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பழனிசாமி முகரையில் செருப்பு வீச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

மதுரா ரயில்நிலைய நடைமேடை மீது ஏறிய ரயில்… விபத்துக்கு யார் காரணம்?

மதுரா ரயில் நிலையத்தின் நடைமேடை மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளான புகைப்படத்தை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பதிவை பார்க்க இப்போது நடந்தது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால், இந்த சம்பவம் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு நடந்தது. இந்த சம்பவத்திற்கு ரயில்வே ஊழியர் ஒருவரின் கவனக் குறைவே காரணம் என்று அப்போது செய்தி வெளியாகி இருந்தது. மத்திய அரசை குற்றம்சாட்டி பலரும் பதிவிட்டும், விமர்சித்தும் வரும் சூழலில், அப்போது […]

Continue Reading

‘இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு’ என்று மாதவி லதா விமர்சித்தாரா?

திருப்பதி லட்டு விவகாரத்தில் 120 கோடி இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு என்று பாஜக-வை சார்ந்த மாதவி லதா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐதராபாத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாதவி லதா தெலுங்கில் அளித்த பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

தீட்டு கழிக்க திருப்பதி கோவில் படிகளை கழுவினாரா பவன் கல்யாண்?

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையான் கோவிலில் படிக்கட்டுகளைக் கழுவி தீட்டு கழிப்பு சடங்கு செய்த பவன் கல்யாண் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் படிகளை ஆந்திரப் பிரதேசம் துணை முதல்வர் பவன் கல்யாண் சுத்தம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீட்டை கழிக்க தீவிர விரதம் […]

Continue Reading

கேரளா கோவிலுக்குள் காலணியுடன் வந்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் செருப்பு மற்றும் ஷு அணிந்து நடனமாடிய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கருப்பு நிற உடை அணிந்த சிலர் குழுவாக நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் உள்ள கோவிலில் செருப்பு மற்றும் ஷு அணிந்து இஸ்லாமியர் பிரவேசம்.‌ பாட்டு டான்ஸ் என களை கட்டும் […]

Continue Reading

முஸ்லிம் முதியவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோடியின் இந்தியாவில் முஸ்லிம் என்பதற்காக முதியவர் ஒருவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive இஸ்லாமிய முதியவர் ஒருவரை நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தாக்கும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் இந்தியாவில் முஸ்லீமாக இருப்பது சாபமாகிவிட்டது – இந்த இந்துத்துவா குண்டர் ஒரு முஸ்லீம் என்பதற்காக கண்ணாடியை உடைத்து […]

Continue Reading

“உங்கள் வீட்டிற்குள் நுழைந்து பணத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு வழங்குவோம்” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினாரா?

உங்கள் வீட்டிற்குள் காங்கிரஸ்காரர்கள் நுழைந்து அலமாரியை உடைத்து பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸ்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? காங்கிரஸ் கட்சிக்காரர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து அலமாரியை […]

Continue Reading

கோவிலுக்கு நெய் விநியோகிக்கும் ஆவினுக்கு எதற்கு ஹலால் என்று பரவும் விஷம பதிவு!

ஆவின் வெண்ணெய்யில் எதற்கு ஹலால் முத்திரை உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆவின் வெண்ணெய் பாக்கெட் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன பாபுஜி ஆவினில் எதற்கு ஹலால்… இந்த ஆவின்தான் தமிழக கோயில்களுக்கும் நெய் சப்ளை செய்கிறதாம்… கொடுமை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜி சாலை என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் போடப்பட்ட மோடியின் ஸ்பேஸ் டெக்னலாஜி சாலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive சாலை ஒன்றிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்க, வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் விண்வெளி தொழில்நுட்பத்தை வைத்து சாலைகள் கண்காணிக்கப்படும் என்று மோடி முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய ஆடியோ […]

Continue Reading

கொல்கத்தாவில் பத்ரகாளியாக நடனமாடிய பெண் டாக்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் நடந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் காளியாக கோரத் தாண்டவம் ஆடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சற்று நடுத்தர வயது பெண் ஒருவர் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் நடனம் ஆடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காளி மாதாவின் கோர தாண்டவம்… டாக்டர்கள் வடிவில். யகொடூரமான பேயாட்ச்சி நடக்கும் மேற்கு […]

Continue Reading

பெரியாரை செருப்பால் அடித்த பெண் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஈ.வெ.ராமசாமி பொியாரை செருப்பால் அடித்த பெண் என்று ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தை பொியார் மற்றும் ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு ஒன்றை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “செருப்பால் அடித்த சிங்கப்பெண். முதன்முதலில் பெரியாரை செப்பால் அடித்த சிங்கப்பெண் இந்த பொன்னம்மாள் பாட்டிதான்” என்று […]

Continue Reading

சீதாராம் யெச்சூரி ஒரு கிறிஸ்தவர் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

சீதாராம் யெச்சூரி ஒரு கிறிஸ்தவர் என்றும் இத்தனை நாட்களாக இந்து பெயரை வைத்து ஏமாற்றி வந்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீதாராம் யெச்சூரியின் இறுதி மரியாதை புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் ஒருவர் வெளியிட்ட ட்வீட் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் ‘’சீதாராம் யெச்சூரியின் மதம் கிறிஸ்தவம் என்றும், இந்து பெயரை வைத்து எத்தனை […]

Continue Reading

‘போதை ஒழிப்பு மாநாட்டில் சி.வி.சண்முகம் பங்கேற்பார்’ என்று அதிமுக அறிவித்ததா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சி.வி.சண்முகம் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “போதை ஒழிப்போம், பாதை அமைப்போம் – சி.வி.சண்முகம் சூளுரை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பேருந்து என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

தி.மு.க ஆட்சியில் அந்நிய முதலீடு கொண்டு வந்து தயாரிக்கப்பட்ட பஸ் என்று ஒரு உடைந்த பேருந்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பின்புறம் உடைந்த நிலையில், கயிறு வைத்து கட்டப்பட்டிருக்கும் அரசு பேருந்தின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து குவிந்த அந்நிய முதலீடுகளைக் கொண்டு தமிழகத்தில் தயாரான அதிநவீன பறக்கும் பாராசூட் பேருந்துகள். […]

Continue Reading

‘நரேந்திர மோடி மைதானத்தில் ஷவர் பாத்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மழை நீர் கொட்டும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive 1 I Facebook I Archive 2 விளையாட்டரங்கம் ஒன்றில் நாற்காலிகள் மீது மழை நீர் கொட்டும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் வாங்கினால் இலவச […]

Continue Reading

ரவுடியை தைரியமாகப் பிடித்த யோகி மாடல் போலீஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச மார்க்கெட்டில் கத்தி காட்டி மிரட்டிய ரவுடியை மடக்கிப் பிடித்த யோகி ஆதித்யநாத்தின் போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கையில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த நபரை காவலர் ஒருவர் லாவகமாகத் தாக்கி கத்தியைத் தட்டிவிட்ட மற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து அடித்து துவைக்கின்றனர்.  […]

Continue Reading

வங்கதேசத்தில் புர்கா அணியாத இந்து பெண்ணை தாக்கும் இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் பொது வெளியில் புர்கா அணியாமல் வந்த இந்து பெண்ணை இஸ்லாமியர் ஒருவர் அடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீல நிற டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் கையில் பச்சை நிற பைப்பை எடுத்துச் சென்று, பெண்களை விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்லாமிய வெறியர்கள் கைப்பற்றிய பங்களாதேஷில் […]

Continue Reading

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்கு சிறை தண்டனை என்ற செய்தி தற்போது வெளியானதா?

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை. திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை. 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்குக் […]

Continue Reading

‘சினிமாப் பாட்டு பாடி, ஆடும் பாதிரியார்’ என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டை சார்ந்ததா?

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பள்ளி விழாவில் சினிமா பாட்டுப் பாடி ஆடிய வீடியோவை சிலர் பகிர்ந்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று திராவிட கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலயா பாடலை பள்ளிக்கூட விழாவில் பாதிரியார் ஒருவர் பாடி ஆடும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஏண்டா திக, திராவிட நாய்களா இதெல்லாம் ஸ்கூல் லிஸ்ட்ல […]

Continue Reading

“சாதி தேவை என்று கருணாநிதியே கூறிவிட்டார்” என்று பரவும் வீடியோ உண்மையா?

“சாதி தேவை என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறிவிட்டார்” என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பேசிய பழைய வீடியோவை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு எடிட் செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அவர், “இன்றைக்கு சாதி தேவைதான். எதற்கு… நான் யார் என்று சொன்னால் தான் […]

Continue Reading

‘இந்துக்களை காக்கும் ஆர்எஸ்எஸ்’ என்று அஜித் தோவல் பதிவிட்டாரா?

இஸ்லாத்திடமிருந்து இந்துக்களை ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதிவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அஜித் தோவல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தொடர்பான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இஸ்லாம் என்ற வெள்ளத்தைத் தடுத்து இந்துக்களை காக்கும் தடுப்பாக ஆர்.எஸ்.எஸ் இருப்பது போன்று ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது. “The Flood […]

Continue Reading

நொறுங்கி விழப்போகும் பட்டேல் சிலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நெருங்கி விழும் நிலையில் உள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையின் கால் பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் ஸ்பேஸ் டெக்னாலஜி சங்கிகளா… பட்டேல் சிலையை கவனிங்கடா… சிவாஜி சிலை உடைந்தது போல பட்டேல் சிலையும் […]

Continue Reading

‘மாணவிகளைத் தொட்டு ஜெபம்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

பள்ளியில் மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் பிற்போக்கு விஷயங்களை பேசியதால் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்ட சூழலில் இப்போது எடுக்கப்பட்ட வீடியோ போல இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவிகளின் தலையைத் தொட்டு கிறிஸ்தவ ஜெபம் செய்யப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அறிவுக் குருடன் […]

Continue Reading

விஜய் ரசிகர்கள் திரையரங்கம் உள்ளே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களா?

நடிகர் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவனுங்கள வச்சாடா ஆட்சியைப் பிடிக்க போற விஜய் தியேட்டரில் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் அடப்பாவிங்களா பத்தி இருந்தா கூண்டோட கைலாசம் போய் இருப்பீங்களேடா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடிய அகிலேஷ் யாதவ் என்று பரவும் வீடியோ உண்மையா?

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கேட் மீது ஏறி தப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டி.வி, பத்திரிக்கை நிருபர்கள், கேமராமேன்கள் சூழ்ந்திருக்க அகிலேஷ் யாதவ் கேட் மீது ஏறி அடுத்தப் பக்கம் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேள்வி கேட்டா […]

Continue Reading

கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய மெழுகுவர்த்தி போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தியுடன் ஆயிரக் கணக்கில் திரண்ட பெண்கள்.பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட […]

Continue Reading

“நெல் மூட்டைகள் மழையில் சேதம்; விவசாயி சோகம்”- இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடந்த சூழலில், மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததைக் கண்டு விவசாயி ஒருவர் சோகமாக அமர்ந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்திருக்க, விவசாயி ஒருவர் வேதனையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார் ரேஸுக்கு டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற […]

Continue Reading

“தி.மு.க ஆட்சியில் மோசமான நிலையில் உள்ள தமிழக சாலை” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கார் ரேஸ்க்கு ரோடு போட நிதி உள்ளது, ஆனால் மக்களுக்கு சாலை அமைக்க நிதி இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பார்முலா கார் ரேஸ் புகைப்படம் மற்றும் சாலையில் மிகப்பெரிய பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் புகைப்படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

“தி.மு.க ஆட்சியில் மோசமான நிலையில் உள்ள தமிழக சாலை” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கார் ரேஸ்க்கு ரோடு போட நிதி உள்ளது, ஆனால் மக்களுக்கு சாலை அமைக்க நிதி இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பார்முலா கார் ரேஸ் புகைப்படம் மற்றும் சாலையில் மிகப்பெரிய பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் புகைப்படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

நீளம் தாண்டுதலுக்கு தயாராக இருக்கும் ஶ்ரீபெரும்புதூரின் குண்டும் குழியுமான சாலைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஶ்ரீபெரும்புதூர் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் சிலர் லாங் ஜம்ப் போட்டி நடப்பது போல் வீடியோ எடுத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எமன் மற்றும் சித்ரகுப்தன் வேடம் அணிந்த சிலர் சாலையில் உள்ள பள்ளத்தில் லாங் ஜம்ப் எனப்படும் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பெரும்பூதூரின் சாலைகள் Long […]

Continue Reading

சென்னை ஃபார்முலா கார் ரேஸில் நிவேதா பெத்துராஜ் பங்கேற்றாரா?

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேசில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய (பார்முலா போட்டி) காரை அறிமுகம் செய்கிறேன் என்று கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் ” […]

Continue Reading