‘’கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ #பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரெணால்டோ...🇯🇴🇯🇴,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

FB Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் பற்றி விவரம் தேடியபோது, இது கடந்த 2016ம் ஆண்டு ரொனால்டோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ என்று தெரியவந்தது.

இதே வீடியோ அவரது அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களிலும் அப்போது செய்தி வெளியாகியுள்ளது. அந்த லிங்க் இதோ…

thesun.co.uk link l washingtonpost link

இதன்படி, சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ரொனால்டோ பகிர்ந்த வீடியோவை எடுத்து, தற்போதைய இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False