குஜராத் சாலை என்று பரவும் பல்கேரியா புகைப்படத்தால் சர்ச்சை!
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழிச் சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரயில் தண்டவாளம் போன்று இடைவெளிவிட்டு பட்டையாக இரண்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்து விபத்து நடந்து விடாமல் இருக்க மோடி கண்டுபிடித்து குஜராத்தில் செயல்படுத்தப் பட்ட இரண்டு வழிச்சாலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவானது 2023 அக்டோபர் 29ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை என்று பகிர்ந்துள்ளனர். மோடி கண்டுபிடிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாலையைப் பார்க்கும் போது இந்தியாவில் உள்ளது போல இல்லை. இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: btvnovinite.bg I Archive 1 I lifebg.net I Archive 2
இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமெஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல்கேரிய மொழியில் வெளியான பல செய்திகளில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது பல்கேரியாவின் தலைநகரில் ஒரு வீதியில் இப்படி சாலை அமைக்கப்பட்டிருப்பதாக அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்த சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக அந்த வீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் பேட்டி எடுத்தும் வீடியோவை தங்கள் இணையதளத்தில் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இவை எல்லாம் இந்த தண்டவாள சாலை புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை என்று பரவும் படம் பல்கேரியா நாட்டில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:குஜராத் சாலை என்று பரவும் பல்கேரியா புகைப்படத்தால் சர்ச்சை!
Written By: Chendur PandianResult: False