‘’ மீனாக்‌ஷி லேகி குத்து நடனம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகமும், மீனாக்‌ஷி லேகியின் முகமும் வெவ்வேறாக உள்ளது.

இந்த நடனம் ஆடும் பெண்ணின் வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும்.

Hrithik Roshan நடித்த 'Bang Bang' என்ற பாடலுக்கு அசத்தல் நடனமாடிய பெண் என்று கூறி இந்த வீடியோவை பல்வேறு ஊடகங்களும் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றன.

Timesnownews link l india.com link l indiatoday link

Nisargmediaproductions என்ற நிறுவனம், இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை முதலில் பகிர்ந்துள்ளது.

முழு வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, 2021ம் ஆண்டு பதிவேற்றப்பட்ட வேறு ஒரு நிகழ்வு தொடர்பான பழைய வீடியோவை எடுத்து ‘மத்திய அமைச்சர் மீனாக்‌ஷி லேகி நடனம்’ என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘மீனாக்‌ஷி லேகி குத்து நடனம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோவால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: False