பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக்கொலை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை News media Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூன் 14ம் தேதி வெளியிட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வானதி சீனிவாசனின் எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். வாகன விபத்து காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் அவர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. அதுவும் பாஜக ஆதரவு ஊடகமான தினமலரில் அப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டது போன்று வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

இதில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த சம்பவம் தொடர்பாக தினமலரில் வெளியான செய்தியை பார்த்தோம். அதில் விபத்து என்று குறிப்பிட்டிருந்தனர். அடுத்ததாக, இந்த நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால், அதில் நமக்கு அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை.

எனவே, தினமலர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். அதன் ஆசிரியர் குழு நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார். அவர், ‘’இந்த நியூஸ் கார்டு போலியானது. இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டு, செய்தியை தினமலர் வெளியிடவில்லை,’’ என்று உறுதி செய்தார்.

நம்முடைய ஆய்வில், வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நுழைந்த நபர் அடித்துக் கொலை என்று எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தினமலர் உறுதி செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: False