‘’திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பாஜக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Screenshot: various FB posts with same caption

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, தீவிர திமுக செயற்பாட்டாளர் ஆவார். இவர், நிறைய ஊடக விவாதங்களில் கூட திமுக சார்பாக பங்கேற்று பேசியிருக்கிறார்.

இந்நிலையில், அவர் பாஜக.,வில் இணைந்துவிட்டதாகக் கூறி மேற்கண்ட தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அப்பாவு வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘’இது வேண்டுமென்றே சிலர் பரப்பி வரும் வதந்தி. அந்த புகைப்படம், ஸ்ரீ குரு சிவசந்திரசுவாமிகளின் மகன் சிவ வைகுந்த் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகும். சபை நாகரீகத்தின் பேரில், அதில் அப்பாவு, பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் சேர்ந்து நின்றிருக்கலாம்,’’ எனக் குறிப்பிட்டனர்.
இதன்பேரில், சிலர் ஃபேஸ்புக்கில் கூட விளக்கம் பகிர்ந்திருக்கின்றனர். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதற்கடுத்தப்படியாக, பாஜக., தரப்பில் கேட்டபோது, ‘’இது தவறான தகவல். இப்படி நடந்திருந்தால், அதுபற்றி ஊடகங்களில் கண்டிப்பாக செய்தி வெளியாகியிருக்கும். ஆனால், இதுபோல செய்தி வெளியாகவில்லை,’’ என்றனர்.

இறுதியாக, மீண்டும் ஒருமுறை சந்தேகத்தின் பேரில் அப்பாவு அவர்களிடம் நேரடியாக பேச முயற்சித்தோம். இதன்பேரில், நமது குழுவினரிடம் பேசிய அவர், ‘’நான் நட்பு முறையில் சிவசந்திரசுவாமிகள் மகன் சிவ வைகுந்த் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே, பொன்.ராதாகிருஷ்ணனும் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்,’’ என்றார்.

இந்த விவகாரம் பற்றி சிவசந்திரசுவாமிகள் அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டிருப்பதாக, அப்பாவு குறிப்பிட்டார். அந்த ஃபேஸ்புக் பதிவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டு, அப்பாவு பாஜக.,வில் இணைந்துவிட்டதாக, வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது. அப்படி அவர் பாஜக.,வில் இணைந்திருந்தால் இதுபற்றி ஊடகங்களில் கண்டிப்பாகச் செய்தி வெளியாகியிருக்கும் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

இந்த ஆய்வுக் கட்டுரை கடைசியாக 16.02.2021 அன்று திருத்தப்பட்டது.

Avatar

Title:FactCheck: திமுக முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு பாஜகவில் இணைந்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False