
‘’முடிவுகளை முதலில் எடுத்துவிட்டு பின்னர் அவற்றை சரியானதாக மாற்றுவேன்’’ என்று ரத்தன் டாடா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ’’சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து, பின்னர் அவற்றைச் சரிசெய்கிறேன். Ratan Tata ‘’, என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் இது பகிரப்படுகிறது. ‘’ I don’t believe in taking right decisions. I take decisions and then make them right – Ratan Tata,’’ என்று நடிகர் விஜய் சேதுபதி கூட இதனை பகிர்ந்துள்ளதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
தொழிலதிபர் Ratan Tata சமீபத்தில் காலமானார். இதையொட்டி சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து, பதிவிட்டனர். அவற்றில் ஒன்றாக நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும் இடம்பெற்றுள்ளது.
உண்மையில் ‘’I don’t believe in taking right decisions. I take decisions and then make them right’’ என்று ரத்தன் டாடா எங்கேயும் பேசியுள்ளாரா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். பல ஆண்டுகளாக, இந்த சொற்றொடர் அவரது பெயரில் பகிரப்பட்டு வருகிறது.
2015ம் ஆண்டு நடைபெற்ற HEC, Paris நிகழ்ச்சியில் இதுபற்றி கேட்டபோது, ‘’நான் அவ்வாறு சொன்னதில்லை,’’ என்று ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்தார்.
ஆனாலும், இந்த வதந்தி தொடர்ந்து இன்றளவும் பரவி வருகிறது. இதுதொடர்பாக, நமது Fact Crescendo English கூட ஃபேக்ட்செக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:முடிவுகளை முதலில் எடுத்துவிட்டு பின்னர் அவற்றை சரியானதாக மாற்றுவேன் என்று ரத்தன் டாடா சொன்னாரா?
Written By: Pankaj IyerResult: False
