சமீபத்தில் வெளியான சாவர்க்கர் படத்தில் செருப்பு தயாரிக்கும் பாட்டா நிறுவனத்துக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சமீபத்தில் வெளியான சாவர்க்கர் படத்தின் திரையரங்க காட்சி ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில், "Special Thanks Bata" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "சாவர்க்கர் படம். சிறப்பு நன்றி பாட்டா கம்பெணி 🤣🤣🤣 அதுவா அமையுது புரியலன்ன கமொன்ட் பாருங்க" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்த வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வலதுசாரிகள் தேசபக்தராகக் கொண்டாடும் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் Swatantrya Veer Savarkar கடந்த 2024 மார்ச் மாதம் வெளியானது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை பெற்றவர் சாவர்க்கர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், ஆங்கிலேயரின் காலணிக்குச் சேவை செய்தவர் என்று சமூக ஊடகங்களில் அவரை பலரும் விமர்சிக்கின்றனர். இதை உறுதி செய்யும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாட்டா என்ற காலணி தயாரிக்கும் நிறுவனத்துக்கு நன்றி கூறப்பட்டதாகப் பகிரப்பட்டு வருகிறது.

உண்மைப் பதிவைக் காண: benq.comI Archive

இந்த படத்தை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரிகிறது. இதை உறுதி செய்ய இந்த புகைப்படத்தை எங்கிருந்து எடுத்தார்கள் என்று அறிய ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். benq.com என்ற இணையதளத்தில் இந்த திரையரங்கு புகைப்படம் நமக்குக் கிடைத்தது. இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து சாவர்க்கர் திரைப்பட காட்சியை வைத்து பாட்டா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பது போன்று போலியாக புகைப்படத்தை உறுதி செய்திருப்பது தெரிந்தது.

உண்மையில் படத்தின் தொடக்கத்தில் பாட்டா நிறுவனத்துக்கு நன்றி கூறவில்லை என்பதை உறுதி செய்ய இந்த படம் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்குக் கிடைக்கவில்லை. சென்னையில் இந்த திரைப்படம் திரையிடப்படுகிறதா என்று பார்த்தபோது, வேளச்சேரியில் ஒரு திரையரங்கில் அந்த படம் இந்தி மொழியில் திரையிடப்படுவது தெரிந்தது. அந்த படத்தை சென்று பார்த்தோம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று பாட்டா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பது போன்று எந்த ஸ்லைடும் இல்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேரடியாக சென்று படத்தை பார்த்தபோது அதிலும் அப்படி இல்லை என்று உறுதி செய்துள்ளோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சாவர்க்கர் திரைப்படத்தில் காலணி நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சாவர்க்கர் திரைப்பட குழுவினர் பாட்டா காலணி நிறுவனத்துக்கு சிறப்பு நன்றி தெரிவித்தனர் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சாவர்க்கர் படத்தில் காலணி தயாரிக்கும் நிறுவனத்துக்கு ‘நன்றி’ தெரிவிக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: Altered