‘’ஜெயலலிதா சாயலில் உலா வரும் இளம்பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ The former Chief Minister late Jayalalithaa is a woman who now looks like the model she used to shine in the film industry..🫣🤩

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா திரைத் துறையில் ஜொலித்த போது இருந்த மாதிரி தோற்றத்தில் இப்போதைய பெண் ஒருவர்..🫣🤩,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.


அப்போது, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று, என தெரியவந்தது. நடிகை நிவேதா தாமஸ் முகத்தை எடிட் செய்து, இவ்வாறு ஜெயலலிதா போன்று மாற்றம் செய்துள்ளனர்.

உண்மையான வீடியோ லிங்க் இதோ…

இதன்படி, 35 Chinna Katha Kaadu - Pre Release Event தொடர்பான வீடியோவை எடுத்து, எடிட் செய்துள்ளனர் என்று நமக்கு தெளிவாகிறது.

மேலும், ஒரு வீடியோ ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மையான முகத்தையும், எடிட் செய்யப்பட்ட முகத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.



எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ, ஜெயலலிதா பெயரில் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   ஜெயலலிதா சாயலில் உலா வரும் இளம்பெண்!
Claimed By :  Social Media User
Fact Check :  ALTERED