புதிய தலைமுறை செய்தியை வைத்து பகிரப்படும் தவறான தகவல்!

அரசியல் சமூக ஊடகம்

புதிய தலைமுறை செய்தியை மேற்கோள் காட்டி, சீமான் மீதான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

இதில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், ’’நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் – தமிழக அரசின் அதிகாரம் குறித்து 2019ம் ஆண்டு ஜூலையில் பேசியது தொடர்பாக, சீமான் மீது முதல்வர் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது,’’ எனக் குறிப்பிட்டுளளனர்.

இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சம்பந்தப்பட்ட செய்தி பிழையான ஒன்றாகும். ஆம், என்ன பிழை இதில் உள்ளது என்று பார்த்தால், ‘’சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்,’’ எனக் கூறியுள்ளதுதான். உண்மையில், ‘’அந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது,’’ என்பதே உண்மையாகும்.

இதுபற்றி ஏனைய தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

News18 Tamil LinkHinduTamil Link

அதாவது, ‘சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு’ எனக் கூறாமல், ‘வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்’ என பிழையான செய்தியை அவசர கதியில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

செய்தியின் தவறு உணர்ந்து, உடனடியாக அதனை நீக்கியும் விட்டது. ஆனால், அதற்குள்ளாக, ஃபேஸ்புக் பயனாளர்கள் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்ய, அது தற்போது வைரலாகி விட்டது.

இந்த தகவலை, புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியிடம் கேட்டு, நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

சீமான் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதுதான் உண்மை. ஆனால், புதிய தலைமுறை ஊடகம், அவசர கதியில், அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது என தவறான செய்தியை ஒளிபரப்பியுள்ளது. பிறகு, தனது தவறை உணர்ந்து அதனை அகற்றியும் விட்டது. அதற்குள்ளாக, ஃபேஸ்புக் வாசகர்கள் அந்த செய்தியை எடுத்து மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

எனவே, புதிய தலைமுறை தவறான செய்தியை வெளியிட்டது உண்மைதான்; ஆனால், அது தவறான செய்தி என்பதால், அதனை உடனடியாக, அகற்றி விட்டனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள். கூடுதல் தகவலுக்கு, +91 9049053770 எனும் Fact Crescendo Chatbot உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:புதிய தலைமுறை செய்தியை வைத்து பகிரப்படும் தவறான தகவல்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •