‘’நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்காது’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ கையெழுத்திட மாட்டோம் - எடப்பாடி. நீட் தேர்வுக்கு எதிராக திமுக மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கையெழுத்திட மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

இதேபோன்று, ஜூனியர் விகடன் லோகோவுடன் ஒரு செய்தியும் பகிரப்படுகிறது. அதனையும் இங்கே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட செய்தி ஒரு fake news ஒன்று எனக் குறிப்பிட்டு, அதிமுக செய்தித் தொடர்பாளர் சத்யன் அவரது அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) தளத்தில் பதிவு ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இதுதவிர ஜூனியர் விகடன் மற்றும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, எடப்பாடி பழனிசாமி சொல்லாத ஒன்றை அவரது பெயரில் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False