
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு மிகவும் அதிகரிப்பதால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூமியில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டு, மக்களுக்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இந்த தகவல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, மக்களை பீதியடையச் செய்யும் வகையில் உள்ளது.
உண்மை அறிவோம்:
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு தோராயமாக, 150 மில்லியன் கிலோ மீட்டர். இதுவே, மைல் கணக்கில் பார்த்தால், 93,000,000 மைல்கள். ஆனால், இந்த தொலைவை தவறாகப் புரிந்துகொண்டு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 90,000,000 கிமீ தொலைவு என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, Aphelion Phenomenon என்பது எப்போதும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாகும். இந்த காலக்கட்டத்தில், இவர்கள் கூறுவது போல, சூரியனில் இருந்து, பூமி அதிக தொலைவுக்குப் போகாது; மாறாக, சில ஆயிரம் கிலோ மீட்டர்கள்தான் விலகிச் செல்லும். அது, 152.6 மில்லியன் கிமீ மட்டுமே. இதையே மறு வார்த்தையில் சொன்னால், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவே அவ்வளவுதான்.
இதேபோல, Perihelion Phenomenon என ஒன்று உள்ளது. அப்போது, 147.5 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும் வகையில், பூமி சூரியனை நோக்கி நெருங்கிச் செல்லும். இது, ஜனவரி மாதத்தில் ஏற்படும்.
இதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பார்த்தால், இந்த Aphelion Phenomenon காலக்கட்டத்தில், பூமியில் கால வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இது இயல்பாக ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான்.

இதேபோன்று தமிழில், தட்சிணாயனம், உத்தரயானம் என்று சூரியன், பூமி இடையிலான இடைவெளி உயர்வது மற்றும் குறைவதைக் கணக்கிடுவார்கள்.
ஆண்டுதோறும் இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்வை எடுத்து, எதோ விசித்திரமானதாகச் சித்தரித்து மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர். ஏற்கனவே இதுபற்றி நாம் அறிவியல் பேராசிரியரின் கருத்தைப் பெற்று, மலையாளம் மற்றும் ஆங்கில மொழியில் விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Fact Crescendo Malayalam Link I Fact Crescendo English Link
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் தகவலில், வேண்டுமென்றே வதந்தியை பரப்பி, பொது மக்களை பீதியடையச் செய்கிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குளிர் அதிகரிக்குமா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Misleading
