அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’சைவ ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உணவு இடைவெளியின்போது சாலையோர ஓட்டல்களில் நின்று செல்வது வழக்கம். இதற்காக, சாலையோரம் இயங்கும் ஓட்டல்கள், தமிழ்நாடு அரசிடம் இருந்து ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி பெறுகின்றன. இந்த அனுமதி பெற்ற ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நின்று செல்லும். ஆனால், இப்படி நிற்கும் ஓட்டல்கள் பலவும் சுகாதாரமற்ற வகையில் உணவு விநியோகித்து, மக்களை ஏமாற்றுவதாக புகார் கூறப்படுகிறது.

இதன்பேரில், புதிய விதிமுறைகளை நிர்ணயித்து, தமிழ்நாடு அரசு, 2022ம் ஆண்டுக்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டது. இதில், முதலில் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்கும் ஓட்டல்கள் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

Archived Link

இதனை மேற்கோள் காட்டி பல்வேறு ஊடகங்களும், சமூக வலைதள பயனாளர்களும் விமர்சித்தனர். இதையடுத்து, அந்த அறிவிப்பில் திருத்தம் செய்து, புதிய ஒப்பந்த விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Archived Link

இதுதொடர்பாக, ஊடகங்களில் வெளியான செய்திகளை கீழே இணைத்துள்ளோம்.

TOI Link I The Print Link

இதுகுறித்து நாம் நியூஸ் 7 தமிழ் மற்றும் தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘’தமிழ்நாடு அரசு முதலில் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையிலேயே நாங்கள் மட்டுமல்ல, முன்னணி ஊடகங்கள் அனைவருமே பிரேக்கிங் செய்தி வெளியிட்டனர். சைவ ஓட்டல்களுக்கு முன்னுரிமையா என பலரும் கண்டனம் தெரிவிக்கவே, பிறகு, தமிழ்நாடு அரசு அந்த உத்தரவில் திருத்தம் செய்து, புதிய அறிக்கை வெளியிட்டது. இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை,’’ என்றனர். 

இந்த விவரம் தெரியாமல், ‘’தமிழ்நாடு அரசு சைவ உணவு ஓட்டல்கள் என எதுவுமே கூறவில்லை. நியூஸ் 7 தமிழ், தந்தி டிவி போன்ற ஊடகங்கள்தான் இப்படி வதந்தி பரப்புகின்றன, அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,’’ எனக் குறிப்பிட்டு, சிலர் வதந்தி பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

Avatar

Title:அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram