‘’அரச மரத்தில் காய்த்து தொங்கிய மாம்பழம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ, அரச மரத்தில் தொங்கும் மாம்பழம், பின்னர், சில பெயர்ப் பலகைகள் போன்றவற்றினை காட்சிப்படுத்திக் காட்டுகிறது.

கலியுகத்தில், அரச மரத்தில் மாம்பழம் காய்க்கும் என்று தெலுங்கு துறவி பிரம்மயங்கார் கூறியதாகவும், அது அப்படியே தற்போது நிகழ்கிறது எனவும் இதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதுபற்றி நாம் பலவிதமாக தகவல் தேடியும், நீண்ட நேரம் எந்த விவரமும் கிடைக்கவில்லை. பிறகு, இந்த வீடியோவிலேயே குறிப்பிட்ட மரத்திற்கு அருகில் அமைந்துள்ள பெயர்ப் பலகை மற்றும் அதன் தொலைபேசி எண்ணைக் கண்டோம். அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேச தீர்மானித்தோம்.

இதன்படி, 0135 – 2431668 என்ற தொலைபேசி எண்ணை நாம் அழைத்தபோது, அது ரிஷிகேஷில் செயல்படும் யாத்ரீக சேவைகள் வழங்கும் Shri Shiv Shankar Tirth Yatra என்ற நிறுவனத்தின் தொடர்பு எண் என்ற விவரம் கிடைத்தது.

அவர்களின் மேனேஜர் மணிஷ் அகர்வால் என்பவர் நம்மிடம் பேசினார். அவர் கூறுகையில், ‘’குறிப்பிட்ட வீடியோவில் காட்டப்படும் பெயர்ப் பலகை எங்களுடையதுதான். இதில் காட்டப்படும் மரம், நான் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. அந்த மரத்தில் இப்படி மாம்பழம் எதுவும் காய்க்கவில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் கண்டிப்பாக, எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கும். இந்த வீடியோ மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. யாரோ மாம்பழத்தை அரச மரத்தில் வைத்து இப்படிச் செய்துள்ளனர்,’’ என்றார்.

எனவே, இந்த வீடியோவில் உள்ளதைப் போல, ரிஷிகேஷில் அரச மரத்தில் மாம்பழம் காய்த்துள்ளது என்று பகிரப்படும் தகவல் உண்மையானது அல்ல என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:அரச மரத்தில் மாம்பழம் காய்த்து தொங்கியதா?- வைரல் வீடியோவால் சர்ச்சை

Fact Check By: Pankaj Iyer

Result: False