‘’பருப்பு, கோதுமை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ள ஜியோ,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3
குறிப்பிட்ட புகைப்படத்தில் ஜியோ பெயருடன் உள்ள சாக்குப் பைகளில், கோதுமை உள்ளிட்ட தானியங்களை மூட்டை கட்டுவதைக் காண முடிகிறது. இதுபோலவே, வேறொரு நிறத்தில் உள்ள ஜியோ சாக்குப் பை பற்றிய புகைப்படமும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
இவர்கள் கூறுவது போல, குறிப்பிட்ட சாக்குப் பைகளில் உள்ள Jio என்பது உண்மையிலேயே, முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

ஆம். Jio நிறுவனத்தின் லோகோவை ஒருமுறை கீழே ஒப்பீட்டிற்காக இணைத்துள்ளோம். அதற்கும், இந்த சாக்கு மூட்டைகளில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. J எழுத்து பயன்படுத்தப்படுவதில் வித்தியாசம் உள்ளதைக் காணலாம்.

இதற்கடுத்தப்படியாக, ஜியோ நிறுவனம் என்பது ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அது முழுக்க முழுக்க டிஜிட்டல் சேவை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் மட்டுமே. அதற்கும், கோதுமை, பருப்பு கொள்முதல், விற்பனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை அந்நிறுவனமே தெளிவாக, தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Jio Website Link

இது மட்டுமின்றி, உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் விற்பனைக்கென பிரத்யேகமாக, ரிலையன்ஸ் குழுமம் சார்பாக, Reliance Fresh, Reliance Smart, Reliance Market போன்ற நிறுவனங்களை கொண்டுள்ளது.

எனவே, ஜியோ நிறுவனம், கோதுமை, பருப்பு கொள்முதல், விற்பனையில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது.

இதற்கடுத்தப்படியாக, இவர்கள் குறிப்பிட்டு பகிரும் சாக்குப் பைகள், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் சாதாரணமாக புழக்கத்தில் உள்ளதுதான் என்று வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். இதற்கும், ஜியோ நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை.

ஆன்லைனில் கூட இந்த ஜியோ சாக்குப் பைகள் விற்கப்படுகின்றன.

IndiaMart Link

இது மட்டுமின்றி, Jio Sona Masoori Steam Rice என்று இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி ஓமன் நாட்டில் Oasis Logistics LLC மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனை, ஜியோ நிறுவனத்துடன் தொடர்புபடுத்தியும் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அதுவும் தவறான தகவல்தான்.

souqmazoon Link

இதுபோலவே, ஜியோ பெயரில் பகிரப்படும் மற்ற சாக்குப் பை புகைப்படங்கள் பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. ஜியோ என்ற பெயரில், சாக்குப் பைகளை வியாபாரிகள் பலரும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இது வட இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. அவற்றை அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றை பேக் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஜியோ என்ற பெயரில் ஏற்கனவே, Shri Jio Agro Food Products Private Ltd மற்றும் Jiyo Fresh என்றெல்லாம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை வேளாண் விளைபொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனையும் செய்கின்றன. இவற்றுக்கும், ரிலையன்ஸ் ஜியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதனை புரிந்துகொள்ளாமல், பலரும் தற்போதைய அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் வீண் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.

இறுதியாக, ரிலையன்ஸ் ஜியோவின் செய்தித் தொடர்பாளரை நமது ஃபேக்ட் கிரஸண்டோ குழுவினர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். ‘’இதுபோன்ற தயாரிப்புகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளவில்லை. இது தவறான தகவல்,’’ எனக் கூறினார்.

Fact Crescendo English Article Link

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FactCheck: ஜியோ தானிய மூட்டைகள் என்ற பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள்- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: False