
சாலையில் உள்ள பள்ளத்தில் ஒருவர் விழுந்தது போலவும் அவருக்கு உதவி செய்ய வந்த காவலரைப் பார்த்து ஹெல்மெண்ட் மட்டும் போட சொல்லுங்க ரோடு ஒழுங்கா போட்டுடாதீங்க, என்று அவர் கூறுவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவுகிறது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்த அந்த படம் உண்மையானதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து விழுந்தது போல படம் உள்ளது. அருகில் உள்ளவர்கள் அவருக்கு உதவி செய்ய வருவது போலவும் சிலர் அதை புகைப்படம் எடுப்பது போலவும் உள்ளது. பார்க்க சித்தரிக்கப்பட்டது போலத் தெரிகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்த நபரின் தலையில் கிராஃபிக்ஸ் மூலம் ஹெல்மெட் போட்டது போல உள்ளது.
நிலைத் தகவலில், “ஹெல்மெட்டை மட்டும் போட சொல்லுங்க ரோடு ஒழுங்கா போட்டுடாதீங்க…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Faizal Raiyan என்பவர் 2019 செப்டம்பர் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரூ நகரில் விண்வெளி வீரர்கள் நடப்பது போன்று ஒரு வீடியோ வைரல் ஆனது. பெங்களூரூ சாலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்று காட்ட விண்வெளி வீரர் போல உடை அணிந்த ஒருவர் மேடும் பள்ளமுமான சாலையில் நடந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதைப்போலவே, இந்த புகைப்படமும் சித்தரிக்கப்பட்டது போல உள்ளது. எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நுழைவாயிலில் இந்தி எழுத்துக்கள் இருப்பதன் மூலம் வட இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பது மட்டும் தெரிகிறது.
PT News Link | Archived Link |
சாலையில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராமல் விழுந்தது போல இந்த புகைப்படம் இல்லை. ஒருவர் திடீரென்று பள்ளத்தில் விழுந்திருந்தால் வந்த வேகத்துக்கு தரையில் தூக்கியடிக்கப்பட்டிருக்க வேண்டும். சாலையில் விழுந்திருந்தால் அவருக்கு உதவப் பலரும் கூடியிருப்பார்கள். ஆனால், எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். ஒருவர் புகைப்படம் எடுப்பதும் தெரிகிறது.இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல மொழிகளில் பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருவது தெரிந்தது.

அதில் படத்தில் இருப்பவர் ஹெல்மெட் அணியாமல் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து ஏதாவது செய்தி கிடைக்கிறதா என்று தேடினோம். இதன் மூலம், அவர் ஹெல்மெட் அணிந்து வந்தார், அரசுதான் சாலையை சரியாக அமைக்கவில்லை என்ற உண்மையும் தவறான தகவலும் அளித்து பதிவிட்டது தெரிந்தது.

இந்த படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம். அப்போது, பாலிவுட் பிரபலம் ஒருவர் பெங்களூரூவில் விண்வெளி வீரர் உடையில் ஒருவர் நடந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததும், அதற்கு ஒருவர் இந்த படத்தைப் பதிவிட்டதும் தெரிந்தது.
Archived Link |
வேறு ஏதேனும் தகவல் கிடக்கிறதா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட பயந்து தரையைக் கிழித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற நபர் என்று இந்த புகைப்படத்தை அவர் ஷேர் செய்திருந்தார். அது அவர் எடுத்தது போலவும் இல்லை.
Archived Link |
அதில் உள்ள இந்தி வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் மற்றொரு புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. அதில், 10 ஆயிரம் அபராதம் கட்ட பயந்து பள்ளத்தில் விழுந்த நபர் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் படத்தையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். பார்க்க செட்டிங் போட்டோஷுட் போல இந்த படம் உள்ளது. பைக்கில் உள்ள நபர் மேல வர முயற்சிக்காமல் போட்டோவுக்கு போஸ்கொடுத்தபடியே உள்ளார். அருகில் உள்ள எல்லோரும் சிரித்தபடி உள்ளனர்.

Facebook Link | Archived Link |
நம்முடைய ஆய்வில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் செட்டிங் போல உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படத்தில் உள்ள நபர் ஹெல்மெட் அணியவில்லை. ஆனால், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் அரசாங்கம்தான் சரியாக சாலை போடவில்லை என்றும் அவதூறான கருத்தைப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:போட்டோஷாப்பில் ஹெல்மெட் போட்டுவிட்டு… இதெல்லாம் தேவையா?
Fact Check By: Chendur PandianResult: False
