
‘’டொனால்டு டிரம்பிற்கு நிர்வாண நிலை வைத்த அமெரிக்க மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில், இதுபற்றி கடந்த 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த பதிவில், அமெரிக்க மக்கள் தன்னை கேலி செய்தபோதும், டிரம்ப் அவர்களை கைது செய்யாமல் ஜனநாயக ரீதியாக விட்டுவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, இது சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் என்று தெரியவருகிறது. இருந்தாலும், இந்த சிலை எதற்காக வைக்கப்பட்டது என்ற உண்மையை கண்டுபிடிக்க, இதில் ஒரு புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
இதன்படி, கடந்த 2016ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவரை விமர்சித்து அந்நாட்டின் சில இடங்களில் The Emperor Has No Balls என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, நிர்வாண சிலைகளை வைத்தனர்.
இருந்தாலும், இதையெல்லாம் கடந்து அதிபர் பதவி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று, 2017ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
எனவே, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் கூறியுள்ளதுபோல, ‘அவர் அதிபராக இருந்தபோது இந்த சிலைகள் வைக்கப்படவில்லை. அதேபோல, கொரோனா வைரஸ்க்கு எதிராக அவர் தோற்றுவிட்டதாகக் கூறி அமெரிக்கர்கள் யாரும் இந்த சிலைகளை வைக்கவில்லை,’ என்று தெளிவாகிறது.
நமது வாசகர்கள் இத்தகைய சந்தேகத்திற்கு இடமான செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி அறிய விரும்பினால், எமது வாட்ஸ்ஆப் தொடர்பு எண் அல்லது இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவுகளில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸ் பாதிப்பு: டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் நிர்வாண சிலை வைத்தனரா?
Fact Check By: Pankaj IyerResult: False
