“கோமியம் வாங்கும் தமிழக பா.ஜ.க?” – ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

அரசியல் மருத்துவம் I Medical

தமிழகத்தில் பசு மாடு வைத்திருப்பவர்கள் அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுத்து பணம் பெறலாம் ஒன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

TNBJP 2.png
Facebook LinkArchived Link

தமிழக பா.ஜ.க ட்வீட் ஸ்கிரீன் ஷாட் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் பசு மாடு வைத்திருப்பவர்கள், அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுத்து அளவைப் பொறுத்து அதற்குறிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 1 லிட்டர் கோமியத்தின் விலை ரூ.100” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை தமிழக பா.ஜ.க 2019 செப்டம்பர் 12ம் தேதி முற்பகல் 11.20க்கு பதிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “ஏன்யா இப்படி அநியாயமா கொள்ளையடிக்கிறீங்க?… கேன்சர் மாத்திரை இரண்டாயிரம் ரூபாய்க்கு விக்கும் போது, அதன் மாற்று மருந்தான கோமியத்துக்கு 1,900-ஆவது கொடுக்கலாம்ல?…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Vaembai Tamilselvan என்பவர் 2019 செப்டம்பர் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில், சுத்தமான கோமியம் விற்பனை செய்யப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அரை லிட்டர் கோமியம் ரூ.255க்கு எல்லாம் விற்பனையானதாக செய்திகள் வெளியாகன. பசும் பாலை விட அதன் கோமியத்துக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதாக தினமலர் செய்தி வெளியாகி இருந்தது. இயற்கை உரமாக, மத சடங்குகளுக்காக, மருத்துவ பலன்களுக்காக கோமியம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கு பசுவின் கோமியம் பயன்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், பசுவின் கோமியம் வாங்கப்படும் என்று தமிழக பா.ஜ.க அறிவித்தது போல ட்வீட் வெளியாகி உள்ளது.

தமிழக பா.ஜ.க ட்விட்டர் பக்கத்திலிருந்து அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல பதிவு உள்ளது. இதனால் இது உண்மையாக இருக்கலாம் என்று கருதி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

TNBJP 3.png
Facebook LinkArchived Link

அமைச்சர் அறிவித்து சில நாட்கள்தான் ஆகிறது. அமைச்சர் தன்னுடைய பேச்சில், பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் இதனை புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப் பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆய்வு முடிந்து, அறிவிப்பு வெளியான பிறகுதான் கோமியத்தைப் பயன்படுத்த முடியும். அதற்குள்ளாக தமிழக பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனால், தமிழக பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தை சென்று பார்த்தோம். அதில், செப்டம்பர் 12ம் தேதி இது போன்று எந்த ஒரு ட்வீட்டும் வெளியாகவில்லை.

TNBJP 4.png
Archived Link

ஒருவேளை ட்வீட் செய்துவிட்டு அகற்றிவிட்டார்களா… இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

TNBJP 5.png

புற்றுநோய் சிகிச்சையில் கோமியம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்ததால் இப்படி ஒரு ட்வீட்டை தமிழக பா.ஜ.க பெயரில் போலியாக உருவாக்கியுள்ளது உறுதியானது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“கோமியம் வாங்கும் தமிழக பா.ஜ.க?” – ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False