
‘’திமுகவின் ஒன்றிணைவோம் வா லோகோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆன்லைன் வழியாக நடத்திய ‘ஒன்றிணைவோம் வா’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்துள்ளனர். அந்த நிகழ்ச்சிகாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லோகோவை தவறாகச் சித்தரித்துள்ளனர். அத்துடன், ‘என்னடா பிட்டு பட ரேஞ்ச்க்கு இறங்கிட்டிங்க,’ என்று கூறியதன் மூலமாக, சாமானிய ஃபேஸ்புக் வாசகர்களுக்கு இதுதான் உண்மையான லோகோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுபற்றிய சந்தேகத்தில் நாமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கம் (@MK Stalin) சென்று பார்வையிட்டோம். அப்போது அவர் இந்த நிகழ்ச்சி பற்றிய சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அவற்றில் இடம்பெற்றிருந்த லோகோ வேறு விதமாக இருந்தது. ஒரு 3 பேர் ஒன்று சேர்ந்து கைகளை உயர்த்துவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

எனவே, சுய அரசியல் லாபத்திற்காக, திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா‘ பிரசாரத்தை கேலி செய்து, தவறான தகவலை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. இதனை மற்ற சாமானிய ஃபேஸ்புக் வாசகர்களும் உண்மை என நம்பி வீண் குழப்பமடைந்துள்ளனர்.

இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் காண நேரிட்டால், அவற்றை எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (9049053770) அனுப்புங்கள். நாங்கள் உண்மைத்தன்மையை பரிசோதித்து முடிவுகளை வெளியிடுகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் எடிட் செய்யப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ பற்றி பகிரப்படும் தவறான லோகோ!
Fact Check By: Pankaj IyerResult: False
