மது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க?

Coronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழக பா.ஜ.க மது மற்றும் போதைப் பொருளை கட்சியினருக்கு விநியோகம் செய்தது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தமிழக பாரதிய ஜனதா கட்சி வழங்க கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு, மது மற்றும் போதைப் பொருட்கள். பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு… மகிழ்ந்திரு…” என குறிப்பிடப்பட்டுள்ளது. “இதெல்லாம் ஒரு கட்சி” என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை Imran Khan என்பவர் 2020 ஏப்ரல் 19ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எந்த ஒரு கட்சியும் மது மற்றும் போதைப் பொருளை இப்படி வெளிப்படையாக ஸ்டிக்கர் ஒட்டி வழங்காது. எனவே, இது எடிட் செய்யப்பட்டது என்பது தெரிகிறது. இதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டோம்.

இந்த படத்தை தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கு அனுப்பி கருத்து கேட்டோம். “இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம்” என்ற அவர், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் ட்விட்டர் பக்கத்தில் அவர் நிவாரணப் பொருட்கள் வழங்குது தொடர்பான ஒரு பதிவின் லிங்கை அனுப்பி, “நிவாரண உதவி பையின் அசல் படம் இப்படித்தான் இருக்கும்” என்றார். அந்த படத்தில், “கொரோனா நிவாரண பொருட்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Twitter LinkArchived Link

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவின் அசல் படம் கிடைக்கிறதா என்பதை அறிய அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பலரும் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

இவற்றுக்கு நடுவே பத்திரிகையாளர் ஒருவர் பா.ஜ.க நிவாரண பொருட்கள் பை படத்தை பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த படத்தை எடுத்து எடிட் செய்து விஷமத்தனமான தகவலை சேர்த்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Archived Link

நம்முடைய ஆய்வில், பா.ஜ.க வழங்கும் கொரோனா நிவாரண பையின் படத்தை எடுத்து எடிட் செய்து தவறான தகவலை சேர்த்துப் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க கட்சியினருக்கு மது மற்றும் போதைப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க?

Fact Check By: Chendur Pandian 

Result: False