அல்லாஹூ அக்பர் என்ற கோஷமிட்டதால் பயந்து ஓடினாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

அரசியல் உலகச் செய்திகள்

‘’அல்லாஹூ அக்பர் கோஷம் கேட்டு பயந்து ஓடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

கடந்த ஜனவரி 12, 2020 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், டிரம்ப் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவின் இடையே அல்லாஹூ அக்பர் என யாரோ ஒருவர் கோஷமிடும் சத்தம் கேட்க, அதைக் கேட்டு டிரம்ப் பயந்து ஓடுவது போல காட்சிகள் இடம்பெறுகின்றன. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் உள்ள ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த வீடியோ தொடர்பான சில விவரங்கள் கிடைத்தன. 

இதன்படி, இந்த வீடியோ 2016ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்டது என தெரியவருகிறது. இதில், அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோது டிரம்ப் ஓஹியோ பகுதியில் பிரசாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது திடீரென கூட்டத்திற்குள் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைந்ததால் சலசலப்பு ஏற்படவே, அவரை உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு அழைத்துச் சென்றனர்.

எனவே, இந்த வீடியோ பழையது என்பதோடு, இது எடுக்கப்பட்ட நாளில் அமெரிக்க அதிபர் பதவியில் டொனால்டு டிரம்ப் கிடையாது. இதுகுறித்த உண்மையான வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றிய சில செய்தி ஆதாரங்களை கீழே இணைத்துள்ளோம்.

Thehill.com Link Abc13.com Link 

இதன்படி, டிரம்ப் பிரசாரக் கூட்டத்தில் எடுத்த வீடியோவை எடிட் செய்து, அல்லாஹூ அக்பர் என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர் என்று தெளிவாகிறது. இதுதொடர்பான வீடியோ கம்பேரிசன் கீழே தரப்பட்டுள்ளது. 

மேற்கண்ட வீடியோ கிளெய்ம் பற்றி நமது Fact Crescendo Malayalam பிரிவு உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அல்லாஹூ அக்பர் என்ற கோஷமிட்டதால் பயந்து ஓடினாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •