திராவிடர் கழக தலைவர் வீரமணி மருத்துவமனையில் அனுமதியா?

அரசியல் | Politics தமிழகம்

‘’சூரிய கிரஹண நேரத்தில் சாப்பிட்ட வீரமணிக்கு திடீர் உடல்நலக் குறைவு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link Archived Link 

Sakthi Jo Sakthijo

என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை டிசம்பர் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த டிசம்பர் 26, 2019 அன்று கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவின் சில பகுதிகளில் தெளிவாக தெரிந்தது. இதையொட்டி, கோயில்களில் பூஜை ரத்து செய்யப்பட்டு, நடை சாத்தப்பட்டது. அதேபோல, கிரகண நேரத்தில் யாரும் சாப்பிடக்கூடாது என்பது போன்ற வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவின.

இந்த மூட நம்பிக்கை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஊடகத்தினரை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சரியாக கிரகண நேரத்தில் சாப்பிட்டுக் காட்டிய அவர், இதுபோன்ற மூட நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து அகற்ற வேண்டும், என்றார்.

இந்த நிகழ்வை அடுத்து பலரும் அவர் பற்றி காரசாரமான விமர்சனங்களையும், வதந்திகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் வதந்தியும். 

வீரமணியின் உடல்நலம் பற்றி பரவிவரும் இந்த செய்தி போலியானது என்றும், கி.வீரமணி உடல்நலத்துடன் உள்ளார் என்றும் மறுப்பு தெரிவித்து, திராவிடர் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிரின்ஸ் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Facebook Link Archived Link

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:திராவிடர் கழக தலைவர் வீரமணி மருத்துவமனையில் அனுமதியா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False