கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம்.

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த Lulu Group தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை புதிய முதலீடாக மேற்கொள்கிறது. இதற்கு, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The News Minute Link I Live Mint Link

இத்தகைய சூழலில், கர்நாடகாவிலும் தற்போது இந்த நிறுவனம் புதிய முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளது.

TOI Link

இதனை கர்நாடகாவில் முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலை எதிர்ப்பார், என்று கேலி செய்து, மேற்கண்ட நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், எழுத்துப் பிழையுடன் கூடிய இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் ஊடகம் வெளியிடவில்லை. அதேபோல, அண்ணாமலையும் இப்படி எங்கும் கூறவில்லை. இதுபற்றி நாம் பாஜக ஐடி., பிரிவு மற்றும் ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு ஆகியவற்றில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False