ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி: திருந்தாத ஃபேஸ்புக் பதிவர்!

சமூக ஊடகம் | Social

ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதனை பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவர் மீது சந்தேகம் தெரிவித்து நமது வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

வதந்தியின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\teacher 2.png

Archived Link

Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இது தவறான தகவல் என்று கூட உணராமல் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:
இதன்படி குறிப்பிட்ட பதிவு உண்மைதானா என சந்தேகிப்பதற்கு முன், இதே தலைப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வதந்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை சமர்ப்பித்திருந்தோம். அதனை இங்கே நமது வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். அக்குறிப்பிட்ட வதந்தியில் உள்ளதைப் போலவே வார்த்தைகளில் சிறு மாற்றம் செய்து, வேறொரு புகைப்படத்தை பகிர்ந்து, தற்போது இப்புதிய வதந்தியை பரப்பியுள்ளனர் என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாகிறது. நமது முந்தைய ஆய்வுக்கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\teacher 3.png

இதே வதந்தியில் ஆசிரியை பெயரை லட்சுமி என்றும், 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து என்றும் சிறிய மாற்றம் மட்டும் செய்து, தற்போதைய புது வதந்தியை பரப்பியுள்ளனர். ஆனால், இதனை பகிர்ந்த ஃபேஸ்புக் ஐடி ஒரே ஆள்தான்; தேதி மட்டும் மாறுபடுகிறது.

C:\Users\parthiban\Desktop\teacher 4.png

இதன்படி, சமூக ஊடக பயனாளர்களை தேவையின்றி குழப்பி புளகாங்கிதம் அடையும் வகையில் இந்த வதந்தியை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெரியவருகிறது. இருந்தாலும், இந்த புகைப்படத்தில் உள்ள நபர் யாரென தெரிந்துகொள்ள ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். ஆனால், நமக்கு கிடைத்த தரவுகள் பலவும் ஆபாசமானவையாக இருந்தன.

C:\Users\parthiban\Desktop\teacher 5.png

எனவே, இதில் இருப்பவர் யாரென அறிய ஃபேஸ்புக் சென்று, இதே தகவலை பதிவேற்றி தேடிப் பார்த்தோம். ஆனால், இதே தகவலை வைத்து வெவ்வேறு பெண்களின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்திருக்கும் விவரம் தெரியவந்தது. எனவே, இது ஆல் பர்பஸ் அங்கிள்கள்/ஆன்டிகளின் லீலை என உணர முடிகிறது.

C:\Users\parthiban\Desktop\teacher 6.png

இதையடுத்து, கூகுள் சென்று இப்படி ஏதேனும் சம்பவம் உண்மையில் நடந்துள்ளதா என தேடிப் பார்த்தோம். அப்போது Puradsifm பகிர்ந்திருந்த ஒரு பதிவின் விவரம் கிடைத்தது. இதுவும் வதந்திதான்.

C:\Users\parthiban\Desktop\teacher 7.png

ஒருவேளை Puradsifm வெளியிட்ட பதிவு உண்மையா என ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் சினிமா பின்னணி பாடகி அகிலா என்ற விவரம் கிடைத்தது. ஆக, Puradsifm வெளியிட்ட பதிவும் தவறான ஒன்று என தெரியவருகிறது.  

C:\Users\parthiban\Desktop\teacher 8.png

எப்படி இருந்தாலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள புகைப்படமும் தவறு, அதில் கூறப்பட்டுள்ள தகவலும் தவறு என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

ஆபாச தகவல்களை பரப்புவோர், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப, எதோ ஒரு தகவலை பகிர்ந்து, அதன் கீழே அழகான பெண்களின் புகைப்படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதற்கு, நாம் எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவ நல்ல உதாரணம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, இந்த ஃபேஸ்புக் பதிவு தவறு என்று முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி: திருந்தாத ஃபேஸ்புக் பதிவர்!

Fact Check By: Parthiban S 

Result: False