எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளார்,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Anbu Gk என்பவர் இந்த பதிவை கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், எச்.ராஜா மற்றும் மோடி புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளார். அதன் மேலே, ‘’ஒரு உண்மையான இந்து முஸ்லீம் உடன் ஒன்றாகச் சாப்பிட மாட்டான்- எச்.ராஜா, பாஜக அமைச்சர்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உமை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தற்போது அமைச்சர் பதவி ஏதேனும் வகிக்கிறாரா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.

இதன்படி, எச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர் பதவி வகிப்பதாகவும், இதற்கு முன் காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி வகித்திருக்கிறார் எனவும் தகவல் கிடைத்தது. இதனை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே காணலாம். இதுபற்றி பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தற்போதைய அரசியல் சூழலில், பாஜக மாநில தலைவராக எச்.ராஜா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நியமிக்கப்படவில்லை என்றாலும் எதுவும் சொல்வதற்கில்லை என, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, உண்மையான இந்து, முஸ்லீம் உடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிட மாட்டான் என, எச்.ராஜா கூறினாரா என்றும் சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், பாஜக தரப்பினரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’இன்றைய சூழலில், ஒரு அரசியல்வாதி பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, எச்.ராஜா பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தவறான அர்த்தம் கற்பிப்பதை எதிர்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த கருத்தும்,’’ என்றனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ளதுபோல எச்.ராஜா அமைச்சர் பதவி எதுவும் வகிக்கவில்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •