
‘’மோடி கோவணம் கட்டியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது,’’ என்று எச்.ராஜா சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
MKS For CM
என்ற ஃபேஸ்புக் ஐடி, அக்டோபர் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ‘’மோடி வேட்டி அணிந்ததால் அதிமுக வெற்றி,’’ எனக் கூறியதாகவும், இதேபோல, எச்.ராஜா, ‘’மோடி வேட்டியுடன் கோமணம் அணிந்திருந்ததால் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது,’’ எனக் கூறியதாகவும் சித்தரித்துள்ளனர். இதனை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வெற்றிபெற்றது.
அதிமுக வெற்றி தொடர்பாகக் கூட்டணி கட்சியான பாஜக தமிழக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஊடகத்தினருக்கு பேட்டி அளித்தார். அதில், மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி வேட்டி கட்டியிருந்தது, தமிழக இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறினார்.
இதுபற்றி News18 Tamilnadu வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மோடி வேட்டியுடன் கோமணமும் கட்டியிருந்ததால்தான் அதிமுக வெற்றி பெற்றது என எச்.ராஜா சொன்னதாகக் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக, News7 Tamil தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம். அப்போது, எச்.ராஜா பற்றிய உண்மையான ஃபேஸ்புக் பதிவு கிடைத்தது.
Facebook Link | Archived Link |
இதன்படி அக்டோபர் 24ம் தேதியன்று, ‘’இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி,’’ என்று எச்.ராஜா கூறியிருக்கிறார். உண்மை இப்படியிருக்க, சொல்லாததை சொன்னதாகக் கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான தகவல்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடி கோவணம் கட்டியதால் அதிமுக வெற்றி: எச்.ராஜா பெயரில் விஷமம்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
