நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியை விவகாரத்து செய்தாரா? தவறான செய்தியால் குழப்பம்!

சமூகம் சினிமா | Cinema

‘’என் மனைவி கர்ப்பமான போது எங்களுக்குள் விவாகரத்து. நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook ClaimArchived Link 1News LinkArchived Link 2

இந்த செய்தியின் தலைப்பை பார்த்தால் எதோ நடிகர் சிவகாரத்திகேயனுக்கு விவாகரத்து ஆனதுபோல தோன்றுகிறது. எனவே, இதனை பலரும் உண்மையா, பொய்யா என தெரியாமல், ஒருவித குழப்ப மனநிலையில் வைரலாக ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழக சினிமாத்துறையில் முன்னணி நடிகராக உள்ளார். அவர் பற்றி என்ன எழுதினாலும் பரபரப்பாக சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்படுவதும், பலர் படிப்பதும் வழக்கம். அதனால்தான், மேற்கண்ட செய்தியும் பரபரப்பிற்காக பகிரப்பட்டுள்ளது.

ஆனால், செய்தியை முழுவதுமாக படித்தால், அதில் எழுதியுள்ள கன்டென்ட் வேறு ஒன்றாக உள்ளது. 

ஆம், தனது பிறந்த நாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஊடக பேட்டி ஒன்றில், ‘’எனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவரை நான் விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி ஊடகங்களில் வதந்தி வெளியானது. இதனை நான் மனைவியிடம் சொல்லாமல் மறைத்து வந்தேன். ஆனால், அதுபற்றி அவருக்கு தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் எதுவும் கவலைப்படவில்லை. சினிமாவில் இதுபோன்ற வதந்திகள் சாதாரணம் என்று கூறி விட்டார்,’’ என்று கூறியதாக, எழுதியுள்ளனர்.

செய்தியின் தலைப்பை பார்த்துவிட்டு செய்தியை கிளிக் செய்து படித்தால் உள்ளே கூறியுள்ள கன்டென்ட் சப்பென்று உள்ளதை உணர முடிகிறது. தலைப்பிற்கும், செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. பரபரப்பிற்காக , இப்படி தவறான தலைப்பு வைத்துள்ளனர் என்றும் தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியை விவகாரத்து செய்தாரா? தவறான செய்தியால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline