மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள்- வைரல் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள். அடித்தே கொல்கிறார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், இளைஞர்கள் சிலரை பொதுமக்கள் கடுமையாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ தீதி ஆளும் மேற்கு வங்காளத்தில் ஜிஹாதிகளின் ஆட்டம்… ஹிந்துக்களை காஃபீர்கள் என அடித்தே கொள்கின்றனர்… Mob lynching எனப்படும் கூட்டமாக சேர்ந்து அடித்தே கொல்லுதல் தான் இவர்களது Modus operandi… மகாராஷ்டிரா சாதுக்கள் இப்படித்தான் அடித்து கொல்லப்பட்டனர்… விரைவில் சிறுபான்மை ஆதிக்கம் செய்யும் தமிழகத்திலும் இது நடக்கும்… ஹிந்து சக்தி ஒன்றிணையாவிடில் பலியாவது நிச்சயம்.. அங்கு தாக்கப்படுவது போல் இங்கும் ஹிந்துக்கள் தாக்கப்படுவீர்கள்.. அவர்களில் ஒருவர்… உங்கள் சகோதரன் ஆக இருக்கலாம்… உங்கள் மகனாக கூட இருக்கலாம்… உங்கள் உறவினர் ஆக இருக்கலாம்… எண்ணிப்பாருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்…. விழித்துக்கொள்ளுங்கள்.. ,’’ என எழுதியுள்ளனர். 

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் இருக்கும் தகவல் உண்மையா எனும் சந்தேகத்தில் இந்த வீடியோவில் உள்ள பிரேம் ஒன்றை பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் முறையில் தகவல் தேடினோம். ஆனால், தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, நமது மேற்கு வங்க நண்பர் ஒருவரிடம் அனுப்பி இந்த தகவல் பற்றி விளக்கம் கேட்டோம். 

வீடியோவை பார்த்த நமது நண்பர், ‘’இந்த வீடியோ, கடந்த 2019ம் ஆண்டில் ஏற்கனவே வங்கதேசத்தை மையமாக வைத்து ஃபேஸ்புக், யூடியுப்பில் பகிரப்பட்டுள்ளது. அதனை வைத்துப் பார்த்தால், இந்த நபர்கள் ஆட்டோ ஒன்றை திருட முயன்றதற்காக, பொதுமக்கள் அவர்களை பிடித்து தாக்கியுள்ளனர். மற்றபடி எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. அவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால், மத ரீதியான நோக்கம் எதுவும் தெரியவில்லை,’’ எனக் குறிப்பிட்டார்.   

இதன்படி, யூடியுப்பில் கடந்த ஆண்டில் பகிரப்பட்ட இந்த வீடியோவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Archived Link 

இதே வீடியோ பற்றி கடந்த ஆண்டில் வெளியான மற்றொரு ஃபேஸ்புக் பதிவின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், இவர்கள் ஆட்டோ திருட முயன்றதால் தாக்கப்பட்டதாக, விவரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 

Facebook Claim LinkArchived Link

இந்த வீடியோவை எடுத்து சமீபத்தில் சிலர் வங்கதேசத்தில் நடந்த மத ரீதியான மோதல் என தகவல் பகிர, அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி ஷேர் செய்ய, அது பல மொழிகள் மாறி தற்போது தமிழிலும் பரவ தொடங்கியுள்ளது. 

இதுதொடர்பாக, மற்ற உண்மை சரிபார்ப்பு ஊடகங்கள் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கின்றன. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம், 

1) மேற்குறிப்பிட்ட வீடியோ வங்கதேசத்தில் நிகழ்ந்தது இல்லை. அது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த பழைய சம்பவம்.
2) 2019ல் நிகழ்ந்த சம்பவம் பற்றிய வீடியோவை எடுத்து தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப சிலர் தவறான தகவலை பகிர்ந்துள்ளனர்.
3) இதில் இருப்பவர்கள் ஆட்டோ திருட முயன்றதற்காக தாக்கப்பட்டிருக்கின்றனர். மற்றபடி இதில் மத ரீதியான மோதல் எதுவும் இல்லை. இது 2019ல் எடுத்த வீடியோ; தற்போது இல்லை.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பழைய வீடியோவுடன் தவறான தகவலை சேர்த்து பகிர்ந்துள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் கூறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள்- வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False